/tamil-ie/media/media_files/uploads/2018/02/dhanush-anirudh.jpg)
குடும்ப விழாவில் தனுஷ் - அனிருத் இருவரும் ஒரே போட்டோவுக்கு போஸ் கொடுத்ததால், இருவரும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனுஷின் உறவினர் இசையமைப்பாளர் அனிருத். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் அனிருத். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகம் முழுக்க ஹிட்டானது. அதன்பிறகு பல படங்களில் இருவரும் ஒன்றாகப் பணியாற்றினர்.
ஆனால், இடையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. தனுஷ், அனிருத், சிவகார்த்திகேயன் என்றிருந்த மூவர் கூட்டணி, தனுஷ் தனியாகவும், அனிருத் - சிவகார்த்திகேயன் தனியாகவும் பிரிந்தது. இதனால், அதுவரை ஹிட்டான தனுஷ் - அனிருத் பாடல்கள் கூட்டணியில் தொய்வு ஏற்பட்டது. இருவரையும் சேர்த்துவைக்க எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், ஒய்.ஜி.மகேந்திராவின் மகன் ஹர்ஷவர்தனாவின் திருமணம், நேற்று காலை நீலாங்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் என்பதால் தனுஷ், அனிருத் இருவருமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அத்துடன், குடும்ப போட்டோவிலும் இருவரும் ஒன்றாக போஸ் கொடுத்தனர்.
அந்த போட்டோவில் அனிருத் முழங்காலிட்டு அமர்ந்து கொள்ள, அவருக்குப் பின்னால் ஐஸ்வர்யாவும், தனுஷும் நின்றபடி போஸ் கொடுத்துள்ளனர். இதன்மூலம் மீண்டும் தனுஷ் - அனிருத் இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.