தனுஷ் காட்டில் பட மழை! இளம் இயக்குநருடன் கூட்டணி!

அசுரனை தொடர்ந்து தனுஷின் இந்த படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

dhanush d 43, karthick naren
dhanush d 43, karthick naren

Dhanush’s D43 with Karthick Naren: நடிகர் தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது அதன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

நியூட்டனுக்கு டப் கொடுத்த சஞ்சு : டி 20 போட்டியில் அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தல்

இது தவிர, ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் அவரின் 43-வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனமே, தனுஷின் 43வது படத்தையும் தயாரிக்கிறது. இதனை ’துருவங்கள் பதினாறு’, ’நரகாசூரன்’, ’மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். அசுரனை தொடர்ந்து தனுஷின் இந்த படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதம் படம் ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கரண்ட் பில், ஜிம் ஃபீஸ் மிச்சம்; மாவரைக்கும் சைக்கிள் கிரைண்டர்; வைரல் வீடியோ

தவிர, பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’ என்ற படத்திலும் தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். சாரா அலி கான் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dhanush d43 karthick naren gv prakash

Next Story
எனது வாழ்க்கையில் ஒரு தேவதை வந்துவிட்டாள் – சினேகா இரண்டாவது குழந்தை பற்றி நெகிழ்ச்சிactress sneha second baby delivery announced, sneha gave seond baby birth, சினேகாவுக்கு இரண்டாவது பிரசவம், சினேகாவுக்கு பெண் குழந்தை, சினேகா பெண் குழந்தை பற்றி நெகிழ்ச்சி, சினேகா குழந்தை போட்டோ, sneha second delivery, sneha - prasanna, sneha, actress sneha, sneha gave girl child, sneha delivery girl child, sneha announce her girl child, sneha child photo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com