பொள்ளாச்சி மற்றும் மும்பையில் தனுஷ் பட ஷூட்டிங்

பொள்ளாச்சி மற்றும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற படப்பிடிப்பு, மும்பை மற்றும் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது.

தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் மும்பை பகுதிகளில் நடைபெற உள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. 2016ஆம் ஆண்டு இந்தப் படத்தை ஆரம்பித்த கெளதம் மேனன், பாதியிலேயே நிறுத்திவிட்டு விக்ரம் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கினார். அந்தப் படம் இறுதிக்கட்டத்தில் வந்தவுடன், அதை நிறுத்திவிட்டு மறுபடியும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வைக் கையில் எடுத்துள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. பொள்ளாச்சி மற்றும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற படப்பிடிப்பு, மும்பை மற்றும் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது.

தர்புகா சிவா இசையமைக்கும் இந்தப் படத்தில், மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு, பிப்ரவரியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகிறார் கெளதம் மேனன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close