ஹீரோயினுக்கு ரசிகராக நடிக்கும் தனுஷ் : யார் அந்த ஹீரோயின்?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், ஒரு ஹீரோயினுக்கு ரசிகராக தனுஷ் நடிக்கிறார் என்கிறார்கள்.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், ஒரு ஹீரோயினுக்கு ரசிகராக தனுஷ் நடிக்கிறார் என்கிறார்கள்.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். தர்புகா ஷிவா இசையமைக்கிறார். 2016 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படம், இன்னும் முடிவடையவில்லை. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கதைப்படி, கல்லூரி மாணவனாக தனுஷும், நடிகையாக மேகா ஆகாஷும் நடிக்கிறார்களாம். மேகா ஆகாஷின் தீவிர ரசிகரான தனுஷ், கல்லூரியில் ஷுட்டிங்கிற்காக வரும் மேகா ஆகாஷிற்கு ஏற்படும் ஆபத்தில் இருந்தும் காப்பாற்றுபவராக நடித்துள்ளாராம்.

தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்திலும் நடித்துவரும் தனுஷ், அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close