Advertisment

இறுதிக்கட்டத்தை நெருங்கிய தனுஷின் ‘வடசென்னை’

மூன்று பாகங்களாகத் தயாராகும் இந்தப் படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
இறுதிக்கட்டத்தை நெருங்கிய தனுஷின் ‘வடசென்னை’

தனுஷ் நடித்துவரும் ‘வடசென்னை’ படம், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகத் தெரிகிறது.

Advertisment

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாகத் தயாராகும் இந்தப் படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை, தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

கேங்ஸ்டராக நடிக்கும் தனுஷ், இந்தப் படத்துக்காக பலவிதமான கெட்டப்களில் நடிக்கிறார். தாடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் நடித்த புகைப்படம் ஏற்கெனவே வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இன்னும் 3 வாரங்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கியிருக்கிறதாம்.

இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இதிலும் ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Dhanush Tamil Cinema Sai Pallavi Aishwarya Rajesh Vetrimaaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment