நிதானமாக பயணிக்கும் கதைக்களம்... ‘பைசன்’ போட்டியில் வெற்றிபெறுமா? விமர்சனம்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பைசன்’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பைசன்’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
baison  2

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ என பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். தற்போது ‘பைசன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Advertisment

பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கபடி வீரர் மனத்தி கணேசன் வாழ்க்கையைத் தழுவி ’பைசன்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்புடன் வெளியானது. 

விமர்சனம்

கபடி விளையாட்டின் மீது வெறியாக இருக்கும் துருவ் விக்ரம், உள்ளூர் அணியுடன் விளையாட சாதி பிரச்சினை தடையாக உள்ளது. இருந்தாலும், பள்ளி ஆசிரியர்கள் தூண்டுதலுக்கு இடையில் ஒவ்வொரு அடியாக முன்னேறுகிறார். பல தடைகளை கடந்து மாநில அணிக்காக விளையாடும் துருவ் விக்ரமின் விளையாட்டு நேர்த்தி அனைவரையும் கவர, இந்திய அணிக்கு தேர்வாகும் சூழலும் உருவாகிறது. 
ஒருகட்டத்தில் ஊரில் கலவரம் வெடிக்க, துருவ் விக்ரமை பல சோதனைகள் சூழ்ந்து கொள்கிறது. இறுதியில் இந்திய அணிக்கு துருவ் விக்ரம் தேர்வானாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

’பைசன்’ கபடி விளையாட்டை சார்ந்த படமாக இருந்தாலும் அதிலும் மாரிசெல்வராஜ்  அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். முதல்பாதி துருவ் விக்ரம், கபடி வீரராக சந்திக்கும் சவால்கள், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் என நகர்கிறது. அதேபோல் இரண்டாம்பாதி துருவின் இலக்கை நோக்கிய பயணம், அதில் இருக்கும் தடைகள், சம்பந்தமே இல்லாமல் அவன் மேல் வரும் சந்தேகம், அதன் பின் இருக்கும் அரசியல் என நகர்கிறது.

Advertisment
Advertisements

துருவ் விக்ரம் அழுத்தமான கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மாமா பொண்ணாக வரும் அனுபமா பரமேஸ்வரன் கதாபாத்திரம் தேவையில்லை என்ற உணர்வை கொடுக்கிறது. அமீரும், லாலும் அனுபவ நடிப்பால் போட்டிபோட்டுள்ளனர். என்னதான் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தாலும்
 தகப்பனாக மகனுக்கு எதுவும் நடந்தவிடக்கூடாது என்ற தவிப்பையும், மகனின் வெற்றியின் பின் இருக்கும் வைராக்கியம் கலந்த பூரிப்பையும் நிறைவாக தந்துள்ளார் பசுபதி.

பைசன் திரைப்படத்தின் நிதானமாக பயணிக்கும் திரைக்கதை சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. மெதுவாக நகரும் முதல் பாதியை இரண்டாம் பாதி காப்பாற்றிவிடுகிறது. சில இடங்களில் கதை திசைமாறிவிட்டதை நன்றாக உணர முடிகிறது. எழில் அரசின் ஒளிப்பதிவும், பிரசன்னா கே.நிவாசின் இசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. தனக்கே உரிய பாணியில் எதார்த்தமான கதைக்களத்தை கொடுத்து மீண்டும் இயக்குநர் மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

Mari Selvaraj Tamil Movie Review

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: