சொந்த தங்கைக்கு அம்மாவாக நடித்தவர்; அயோத்தி படத்தில் இந்த நடிகை கவனிச்சீங்களா?

அயோத்தி படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி அம்மாவாக நடித்தது யார் என்ற உண்மையை அவர் ஒரு நேர்க்காணலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அயோத்தி படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி அம்மாவாக நடித்தது யார் என்ற உண்மையை அவர் ஒரு நேர்க்காணலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
ayothi movie

2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "அயோத்தி". வெளியானது முதல் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமைந்தது. வட இந்திய குடும்பம் ஒன்று தமிழ்நாட்டுக்கு வரும்போது, அவர்களுக்கு ஏற்படும் அசாதாரணச் சூழலை மனிதாபிமானத்துடன் அணுகும் கதைக்களமே இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

Advertisment

இப்படத்தில் கிராமத்துப் பெரியவர் கதாபாத்திரத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருந்தார். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இளம் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் யஷ்பால் சர்மா, அஞ்சு அஸ்ரானி, புகழ், வினோத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கலாட்டா தமிழுக்கு அளித்த பேட்டியில் "அயோத்தி" திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது, அயோத்தி படத்தில் ப்ரீத்தி அஸ்ராணிக்கு அம்மாவாக நடித்தவர் வேறு யாருமல்ல, அவர் தன்னுடைய சொந்த அக்கா அஞ்சு அஸ்ராணிதான் என்று அவர் தெரிவித்துள்ளார். அஞ்சு அஸ்ராணிக்கு வயது குறைவு என்றாலும், கதைக்காக அவரை வயதான தோற்றத்திற்குக் கொண்டு வர, படக்குழு அவருக்குப் புடவை கட்டி, கொண்டை போட்டு, ஒரு 'ஆண்டி'யைப் போலத் தோற்றம் அளிக்கும் வகையில் ஒப்பனை செய்து நடிக்க வைத்திருக்கிறது. திரையில் இயல்பாகத் தெரிந்த இந்தக் கதாபாத்திரம், நிஜத்தில் சகோதரிகள் சேர்ந்து நடித்ததுதான் இதன் தனிச்சிறப்பு.

அஞ்சு அஸ்ராணி இப்படத்தில் யஷ்பால் சர்மாவின் மனைவியான ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூகத்தில் பெண்கள் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வரும் இந்த நவீன காலத்திலும், பல குடும்பங்களில் பெண்களுக்கு ஆண்களின் அடிமையாக இருக்கும் நிலை தொடர்கிறது என்ற உண்மையை உரக்கச் சொல்லும் விதமாகவே இவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

Advertisment
Advertisements

anju asrani

கணவரின் அடக்குமுறைக்குள் வாழும் ஒரு பெண்ணின் தவிப்பை, ஜானகி கதாபாத்திரத்தில் அஞ்சு அஸ்ராணி மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக, ஒரு கட்டத்தில் உயிரிழந்த பிறகும், பிணமாக நடித்து, பார்வையாளர்களின் நெஞ்சை உலுக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி அவர் வியக்க வைத்திருப்பார். இந்த உணர்வுபூர்வமான அத்தியாயம்தான் திரைக்கதையின் மையமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: