scorecardresearch

திலீப்பிற்கு மேலும் நெருக்கடி: கலாபவன் மரணத்திலும் தொடர்பு?

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைதாகி போலீஸ் கஸ்டடியில் உள்ள நடிகர் திலீப்பிற்கு மறைந்த நடிகர் கலாபவர் மரணத்திலும் தொடர்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்போது, அந்த கும்பல் காரிலேயே பாவனாவை பாலியல் தொல்லை செய்தனர். மேலும், இந்த சம்பவத்தை அந்த கும்பல் தங்களது செல்போனில் விடியோ எடுத்து வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் […]

திலீப்பிற்கு மேலும் நெருக்கடி: கலாபவன் மரணத்திலும் தொடர்பு?
நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைதாகி போலீஸ் கஸ்டடியில் உள்ள நடிகர் திலீப்பிற்கு மறைந்த நடிகர் கலாபவர் மரணத்திலும் தொடர்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்போது, அந்த கும்பல் காரிலேயே பாவனாவை பாலியல் தொல்லை செய்தனர். மேலும், இந்த சம்பவத்தை அந்த கும்பல் தங்களது செல்போனில் விடியோ எடுத்து வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. திலிப் அளித்த புகாரில், கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக நடிகர் திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

மேலும், பாவனாவின் வீடியோவை, நடிகர் திலிப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் நபரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சன் சுனி முன்னதாக கடிதம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், காவ்யா மாதவனின் கடையில் அதிரடியாக சோதனை நடத்தி, ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர்.

நடிகர் திலீப்பின் படப்பிடிப்பில், பல்சர் சுனியும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து, திலீப்புக்கும், பல்சர் சுனிக்கும் இடையேயான தொடர்பு இருப்பது அம்பலமானது.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து, நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் தலைமறைவானார்கள். இந்நிலையில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார். இந்த நிலையில், மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மரணத்திலும் திலீப்பிற்கு தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் பைஜூ கொட்டாரக்காரா என்பவர் ஆரம்பத்திலேயே இந்த சந்தேகத்தை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் என்பவரும் இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளார். மேலும், கலாபவன் மணி மரணம் தொடர்பான காவல் துறை விசாரணை திருப்திகரமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஏதோவொரு ஒப்பந்தம் தொடர்பாக கலாபவன் மணிக்கும், திலீப்பிற்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Dileep now linked to kalabhavan manis death after fresh allegations by the late actors family