இன்று ஆஜராகும் காவ்யா மாதவன்?

இந்த நிலையில், காவ்யா மாதவனும் அவரது தாயாரும் பெங்களூரில் இருக்கலாம் என்கிற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.

கேரள மக்களின் நாயகனாக இருந்த திலீப் இன்று வில்லனாக காட்சியளிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப், இரண்டு நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவரது ஜாமீன் மனுவையும், பாவனா வழக்கு விசாரணை, ஆரம்ப நிலையில் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. திலீப்பால் ரூ.30 கோடிக்கும் மேல் திரைத்துறையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் இம்மாதம் வெளியாகவிருந்த திலீப்பின் ராம்லீலா திரைப்படமும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனை விசாரிக்க போலீசார் முயற்சி செய்த போது அவரும், அவரது தாயார் சியாமளாவும் கடந்த ஒரு வாரமாகத் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களது செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்கல்லூர் கோயிலுக்கு அதிகாலையில் நடிகர் திலீப் மற்றும் காவ்யா மாதவன் ரகசியமாக சாமி கும்பிடச் சென்றனர். அதன்பின்தான் காவ்யா மாதவன் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

பாவனா வழக்கில் நடிகை காவ்யா மாதவனை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. இந்த நிலையில், காவ்யா மாதவனும் அவரது தாயாரும் பெங்களூரில் இருக்கலாம் என்கிற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. தற்போது காவ்யா மாதவன் இருக்கும் இடத்தைக் கேரளப் போலீஸார் கண்டுபிடித்துவிட்டார்களாம். சியாமளாவையும், காவ்யா மாதவனையும் நேரில் ஆஜராகுமாறு போலீஸார் தெரிவித்து உள்ளார்களாம். அதனைத் தொடர்ந்து, இன்று இரவுக்குள் காவ்யா மாதவன் கொச்சியில் ஆஜராகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

×Close
×Close