தினேஷ், அதிதி மேனன் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’

தினேஷ், அதிதி மேனன் நடிக்கும் படத்திற்கு ‘களவாணி மாப்பிள்ளை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தினேஷ், அதிதி மேனன் நடிக்கும் படத்திற்கு ‘களவாணி மாப்பிள்ளை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kalavaani mappillai

தினேஷ், அதிதி மேனன் நடிக்கும் படத்திற்கு ‘களவாணி மாப்பிள்ளை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மணிவாசகம். இந்தப் படங்களை அவருடைய ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

மணிவாசகம் மறைவுக்குப் பின் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த இந்த நிறுவனம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படங்களைத் தயாரிக்க இருக்கிறது. மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் ‘களவாணி மாப்பிள்ளை’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்குகிறார்.

இந்தப் படத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்க, அதிதி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

Aditi Menon Tamil Cinema Attakathi Dinesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: