கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்து, ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கினார். தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கியுள்ள ‘மாயவன்’ படத்துக்கு இவர்தான் கதை எழுதியுள்ளார்.
நலன் குமாரசாமிக்கும், சரண்யாவுக்கும் இன்று காலை திருச்சியில் உள்ள வாசவி திருமண மண்டபத்தில் கல்யாணம் நடைபெற்றது. நடிகர்கள் விஜய் சேதுபதி, ஷாந்தனு பாக்யராஜ், கருணாகரன், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ரா.பார்த்திபன் மற்றும் நடிகை மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.