Advertisment

சாதி படம் எடுக்கிறது தப்பு இல்ல… சாதி பெருமை பேசுறது தப்பில்ல - இயக்குனர் பேரரசு

“சாதி படம் எடுக்கிறது தப்பு இல்ல, சாதி பெருமை பேசுறது தப்பில்ல, ஆனால், இன்னொரு சாதியை சிறுமைப் படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்று இயக்குனர் பேரரசு பேசியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Director Perarasu says It is not wrong to make a caste film, Director Perarasu says not wrong to talk about caste pride, சாதி படம் எடுக்கிறது தப்பு இல்ல இயக்குனர் பேரரசு, சாதி பெருமை பேசுறது தப்பில்ல இயக்குனர் பேரர்சு, பேரரசு, இயக்குனர் பேரரசு, Director Perarasu

இயக்குனர் பேரரசு

“சாதி படம் எடுக்கிறது தப்பு இல்ல, சாதி பெருமை பேசுறது தப்பில்ல, ஆனால், இன்னொரு சாதியை சிறுமைப் படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்று இயக்குனர் பேரரசு பேசியுள்ளார்.

Advertisment

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு பா.ஜ.க-வில் இணைந்து அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வருவது அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் சலங்கை துரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடத்தல்' திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பேரரசு, சினிமாவில் சாதி படம் எடுக்கிறது தப்பு இல்ல, சாதி பெருமை பேசுறது தப்பில்ல, ஆனால், இன்னொரு சாதியை சிறுமைப் படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.

காத்தவராயன், காந்தர்வன், இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கடத்தல்'. இப்படத்தை பி.என்.ஆர். கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் எம்.ஆர். தாமோதர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயின்களாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஆர். ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க. சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கிரைம் திரில்லர் படமான ‘கடத்தல்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. அதற்கு முன்னதாக, இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பேரரசு பேசியதாவது: “கடத்தல் இது என்ன கடத்தல், ஆள் கடத்தலா? எம்.எல்.ஏ.கடத்தலா? உலகிலேயே மிகப்பெரிய கடத்தல் நாள்கடத்தல் தான். நாம் அனைவரும் நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். சில டைட்டில்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தோன்றும் அப்படியான டைட்டில் இந்தக் கடத்தல். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

செல்வாக்கால் படம் வெற்றி பெறுவதாகச் சொன்னார்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி படங்களை வெற்றிப்படமாக்கலாம் ஆனால், அந்த வெற்றி நிலைக்காது. எவர்கிரீன் வெற்றி என ஒன்று உண்டு, 10 வருடம் கழித்துப் படத்தின் டைட்டில் சொன்னால் நடித்த நடிகர்கள், படத்தின் கதை, சீன் எல்லாவற்றையும் மக்கள் சொல்வார்கள் அந்த வெற்றியைச் செல்வாக்கால் தர முடியாது.

சில படங்களுக்கு விளம்பரம் நிறையச் செய்ய முடியும் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரம் செய்து தியேட்டருக்கு ஆட்களை வரவைக்கிறார்கள். ஆனால், வெற்றியை மக்கள் தர வேண்டும். என்ன பிரச்னையை வேண்டுமானாலும் படத்தில் சொல்லலாம் நமது வலியைச் சொல்லலாம் ஆனால் அதை மக்கள் அனைவரும் கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். ஆனால், மக்கள் சிலருக்கு வலியைத் தரும்படி படமெடுக்கக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது. இப்போது மக்கள் என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க என்று கவலையுடன் கேட்கிறார்கள். மக்கள் சில நேரம் படம் ஏன் சரியில்லை என கேட்பார்கள் ஆனால் அதை விட, என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க? எனக் கேட்பது பெரிய வலி.

சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன், ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே சாதிதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை, எனக்குச் சொல்லவே வலிக்கிறது. உலகமே கொண்டாடிய இசை மேதை ஜீனியஸ் தாழ்த்தப்பட்டவர், அவர் காலில் விழுந்து வணங்கவில்லையா அவரை சாதி பார்த்தார்களா சினிமாவில் ஜெயித்தவர் காலில் எல்லோரும் விழுவார்கள். அது தான் சினிமா, அவரை சாதி என்ன என பார்க்க மாட்டார்கள். என்னை உதவியாளராக சேர்த்த போது நான் என்ன சாதி என கேட்கவில்லை. விஜய் சார் வாய்ப்பு தந்தார் அவர் என்னிடம் கதை தான் கேட்டார் சாதி கேட்கவில்லை, தயாரிப்பாளர் சவுத்திரி சார் சாதியைக் கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் சாதி என்ன என கேட்பவன் இயக்குனரே இல்லை. சிறுபான்மையினர், சாதி, மதம் இதையெல்லாம் சினிமாவில் கலக்காதீர்கள். இப்படி ஆரம்பித்தால் தேவர் மகன், கவுண்டர் மகன் என படம் வரும் தனித்தனி சாதி குழுக்கள் வரும்.

அதையெல்லாம், குறை சொல்லவில்லை. சாதிப்படம் வரட்டும் சாதிப் பெருமை பேசட்டும், சாதி படம் எடுப்பது தப்பு இல்ல, சாதி பெருமை பேசுவது தப்பில்லை. ஆனால், இன்னொரு சாதியை சிறுமைபடுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. சாதி படம் வரட்டும் வரவேற்கிறேன். ஏனென்றால், அது 30 வருடங்கள் கழித்து அந்த சாதியின் பண்பாடு, கலாச்சாரத்தின் பதிவாக இருக்கும். முன்பு நடந்த கதையை இப்போது பேசி பிரச்சினை ஆக்காதீர்கள். சினிமாவிற்குள் சாதி வேண்டாம். சாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்பட குழுவினர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment