மலையாள நடிகை திவ்யா உண்ணிக்கு இரண்டாவது திருமணம்

பிரபல மலையாள நடிகை திவ்யா உண்ணிக்கு, அமெரிக்காவில் நேற்று இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

பிரபல மலையாள நடிகை திவ்யா உண்ணிக்கு, அமெரிக்காவில் நேற்று இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் திவ்யா உண்ணி. மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கி சினிமாவில் கால் பதித்தி திவ்யா உண்ணி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ‘சபாஷ்’, ‘கண்ணன் வருவான்’, ‘பாளையத்து அம்மன்’, ‘வேதம்’, ‘ஆண்டான் அடிமை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சுதிர் சேகரா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட திவ்யா உண்ணி, அவரைப் பிரிந்துவிட்டதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹோஸ்டன் நகரத்தில் வசித்துவரும் திவ்யா உண்ணி, நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஹோஸ்டன் நகரில் உள்ள குருவாயூரப்பன் சன்னிதியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மும்பையை பூர்வீகமாகக் கொண்ட அருண் குமார் என்பவரைத் தான் திவ்யா உண்ணி திருமணம் செய்து கொண்டுள்ளார். அருண் குமார், இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார்.

மலையாள நடிகைகள் மீரா நந்தன் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோரின் உறவுக்காரர் திவ்யா உண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close