இளையராஜா வாலி கூட்டணியில் உருவான திரைப்பட பாடல்கள் காலங்கள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கவிஞர் வாலியின் மறைவுக்கு பின்னரும், இசைஞானி இளையராஜா அவரை பற்றி பேசிவருகிறார்.
இந்த நிலையில், ராஜாதி ராஜா படத்தின் பாடலில் வாலி சொன்ன திருத்தம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா படத்தில் ரஜினிகாந்த் மிகவும் அழகாக இருப்பார்.
இந்தப் படத்தில் ஓபனிங் சாங், மலையாள கரையோரம் கவிபாடும் குருவி.. இந்தப் பாடலில் கவிஞர் வாலி சொன்ன திருத்தத்தை இளையராஜா ஏற்றுக்கொண்டுள்ளார்.
மலையாள கரையோரம் கவிபாடும் குருவி படத்தில் ஹம்மிங் பின்னால் இருந்தது. இந்த ஹம்மிங் முன்னால் வந்தால் நன்றாக இருக்கும் என நான் கூறினேன். அவர் அதை கேட்டார். என் கருத்தை எத்தனையோ பாடல்களில் ஏற்றுக்கொண்டுள்ளார்” என்றார்.
மேலும் சில பாடல்களில் ஆண் பாடினால் நன்றாக இருக்கும் எனக் கேட்பார். என் நியாயமான திருத்தங்களை அவர் கேட்பார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“