பிரபல டிவி ஷோவுக்கு வரப்போகிறார் ஹன்ஸிகா லவ்வர்!!!

வெளிநாட்டுல இருந்து எத்தனையோ டிவி ஷோஸ் இந்தியாவுக்கு வந்துருக்கு. அதில் ஒரு அங்கம் தான் பிக் பாஸ். பிக் பாஸ் ஷோ முதன் முதலில் நெதர்லாண்டில் தான் துவங்கியது. அங்க ‘பிக் பிரதர்’ என்ற பேரில் ஆரமிக்கப்பட்ட ஷோ  படிப்படியா பிரபலமாகி, இந்தியா உள்ளேயும் வந்துடுச்சு. பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிலும் கால் வைத்த பிக் பாஸ் சென்ற வருஷம் தமிழ் மொழியில திரையிட்டாங்க.

இந்த வருஷத்தின் பார்டு 2-ல் 60 கேமரா நோட்டம் போட, 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் இருப்பாங்க என்பது எல்லாருக்கும் தெரியும். இதுல யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா? இதுக்கு முன்னாடி நாம பதிவு செய்த செய்தியில் சிம்ரன், யாஷிகா இவங்களாம் கலந்துக்கலாம் என பேசினோம். ஆனால் இதையெல்லாம் ஓவர்டேக் ஆவது மாதிரி, சூடான ஒரு நியூஸ் இருக்கு.

இதுவரைக்கும், மூஞ்சி புக், டவிட்டர் என சோஷியல் மீடியாவில் பெரிய ட்ரோல் அரசனாக இருந்த ஹன்ஸிகா லவ்வர் (அப்படினு இவரே சொல்லிகிறாரு) இப்போ உங்க வீட்டு டிவி உள்ள புகுந்து மொத்த குடும்பத்துக்கும் இம்சை கொடுக்க வருகிறார்.

சும்மாவே ஹன்ஸிகா…ஹன்ஸிகா-னு புலம்பியே ஃபேமஸ் ஆகிட்டாரு. இப்போ பிக் பாஸ் ஷோலையும் கலந்துக்கிட்டா என்ன ஆகும்??? அவரு வருவாரா வர மாட்டாரா என யாருக்கும் தெரியாது. ஆனா வரனும்னு இருந்தா கண்டிப்பா வருவாரு… வெயிட் அண்ட் வாட்ச்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close