/indian-express-tamil/media/media_files/2025/10/19/priyanka-2025-10-19-12-09-15.jpg)
தமிழ்நாட்டில் பிரபலமான கல்லூரிகளில் ஒன்று சாய்ராம். இந்த கல்லூரியில் படிப்பதை பலரும் பெருமையாக நினைக்கின்றனர். அதேசமயம் இக்கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களும் நடக்கின்றன. பிரபல நடிகரான விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இங்கு தான் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல், இளம் நடிகர்கள் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் ப்ரீ ரிலீஸ் ஈவெண்டும் இங்கு தான் நடைபெற்று வருகிறது.
இதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கல்வி செயற்பாட்டாளர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்துதான் வருகின்றன. அவர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர், சசிகுமார் உள்ளிட்டோரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அமீர் இதுகுறித்து அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் சசிகுமார், 'தனது திரைப்படம் தொடர்பான விழாக்களை கல்லூரிகளில் நடத்துவதில் உடன்பாடு இல்லை' என்று தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ திரைப்படத்தின் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்ச்சி சாய்ராம் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் தான் நடந்தது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே பிரியங்கா, இந்த கல்லூரியின் ‘டியூட்’ யார் என்று கேட்டார். அதற்கு அங்கு கூடியிருந்த மாணவர்கள் ‘பாலு’ என்று கூச்சலிட்டனர். இதை கேட்ட பிரியங்கா எதையும் யோசிக்காமல் உடனே ‘டேய் பாலு எங்கடா இருக்க பாலு’ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இதை கேட்ட மாணவர்களும் சிரித்தனர்.
ஆனால், பின்னர்தான் தெரிந்தது அது மாணவன் கிடையாது சாய் ராம் கல்லூரியின் நிறுவனர் என்று. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியங்கா, 'பாலு சார். சாய்ராம் கல்லூரியின் நிறுவனரா?' என்று அதிர்ச்சியுடன் கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. இதை பார்த்த பலரும் பிரியங்கா என்ன எதுவும் யோசிக்காம இப்படி பேசுறாங்க என்று கமெண்ட் செய்து வந்தனர்.
Official poster - 45 crores in two days for #Dude 🔥👌 vera level numbers for Pradeep Ranganathan. The young crowd puller of Tamil cinema filling the much needed gap for the industry! pic.twitter.com/2B2p9ldAiM
— Siddarth Srinivas (@sidhuwrites) October 19, 2025
மேலும், இதற்குத்தான் கல்லூரியில் சினிமா நிகழ்ச்சியை நடத்தக்கூடாது. கல்லூரியின் நிறுவனருக்கு இந்த அவமானம் தேவையா? என்று பலரும் கேள்வி கணைகளை தொடுத்து வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ திரைப்படம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருப்பார். இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ. 45 கோடி ரூபாய் வசூல் செய்ததாக இணையத்தில் போஸ்டர் ஒன்று வரைலாகி வருகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.