இந்த வாரம் ரிலீஸான 4 படங்கள் இதெல்லாம் தான்!

பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

author-image
shalini chandrasekar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Enai Nokki Payum Thotta

Enai Nokki Payum Thotta

Enai Nokki Payum Thotta - Market Raja : இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Advertisment

கெளதம் மேனனின் ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை தயாரித்து, ரிலீஸும் செய்திருக்கிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். படத்திற்கு இசை தர்புகா சிவா. எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பணிகள் அனைத்தும் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்தாலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் இதன் வெளியீடு தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஆரவ், நடிகை ஓவியாவால் பிரபலமானார். அதோடு, பிக்பாஸ் பட்டத்தையும் வென்றார். அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் முதல் படம் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. இந்தப் படத்தை ’காதல் மன்னன்’, ’அமர்க்களம்’, ‘வசூல் ராஜா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சரண் இயக்கியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் டானாக நடிக்க, காவ்யா தாப்பர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படமும் இன்று வெளியாகியுள்ளது.

’சாட்டை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘அடுத்த சாட்டை’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அன்பழகன். இதில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்துப் பேசுகிறது இப்படம்.

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..

இயக்குநர் எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள படம் ‘அழியாத கோலங்கள் 2’. இதில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படமும் இன்று வெளியாகியுள்ளது.

Dhanush Gautham Menon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: