Entertainment Tamil News: ஆதவன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஜிகர்தண்டா தூத் சாப்பிடும் போது, 'நான் வேர்ல்ட் புல்லாம் பேமஸ்சு' என்று வித்தியாசமான மாடுலேஷனில் டைலாக் சொல்லுவார். முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமாகிய 'ஷிவாங்கி', தற்போது 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சி மூலம் 'வேர்ல்ட் பேமஸ்' ஆயிருக்கிறார்.
Advertisment
குக் வித் கோமாளி ஸ்டார் - ஷிவாங்கி
அந்த சமையல் நிகழ்ச்சியில் ஷிவாங்கி செய்யும் சுட்டி தனத்திற்கும், வெகுளித்தனத்திற்கும் தனி ரசிகர்களே உள்ளனர். சுட்டித்தனத்தோடு கூடிய சங்கீத ஞானமும் உள்ளதால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எல்லாம் அடி தூள் செய்கிறார். இசை குடும்பத்தில் ஷிவாங்கியின் அப்பா மற்றும் அம்மா இருவருமே பிரபல பாடகர்கள். சமீபத்தில் அவர்கள் இருவரும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளனர்.
குறும்புத்தனதிற்கு பெயர் போன ஷிவாங்கியின் குழந்தை வயது புகைப்படங்களை, அவரது அம்மா பின்னி கிருஷ்ணகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் சுட்டிக் குழந்தையாக இருக்கும் ஷிவங்கியை பார்த்த பலர், இது குக் வித் கோமாளி ஷிவாங்கி தான ஆச்சரியத்தில் உள்ளனர்.