Advertisment

விஜய் டி.வி சீரியலுக்கு மாறிய சன் டி.வி நடிகை : உண்மை நிலவரம் என்ன?

ஜனனி கேரக்டரின் நெருங்கிய தோழியாக வரும் வசு ஜனனிக்கு வரும் பிரச்னைகளில் இருந்து விடுபட அவருக்கு உதவுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ethir Neechal Vaishnavi

எதிர்நீச்சல் சீரியல் நடிகை வைஷ்ணவி

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஒருவர் விரைவில் விஜய் டிவியின் தொடங்க உள்ள புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். தேவயானி நடிப்பில் வெளியான கோலங்கள் என்ற மெகாஹிட் சீரியலை கொடுத்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். குடும்பத்திற்குள் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் வசு என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி. ஜனனி கேரக்டரின் நெருங்கிய தோழியாக வரும் வசு ஜனனிக்கு வரும் பிரச்னைகளில் இருந்து அவருக்கு தோள் கொடுக்கும் ஒரு நல்ல தோழியாக வரும் வசு கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மேலும் குணசேகரனை கேள்வி கேட்கும் ஒரு கேரக்டரில் வைஷ்ணவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நடிகை வைஷ்ணவி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வப்போது எதிர்நீச்சல் சீரியலில் வந்துகொண்டிருக்கும் வைஷ்ணவி இனிமேல் கிழக்கு வாசல் சீரியலில் நிரந்தராமாக வருவார் என்று கூறப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் இந்த சீரியலில் நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த சீரியலில் வெங்கட் ரங்கநாதனுக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்க உள்ளாரா அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment