Advertisment

எதிர்நீச்சல் ஆதிரையா இவர்? நீச்சல் குளத்தில் இப்படி இருக்கிறாரே! போட்டோஸ் வைரல்

ஆதிரையாக நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் தற்போது நீச்சல் குளத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ethirneechal

எதிர்நீச்சல் சீரியல் நடிகை சத்யா தேவராஜன்

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் தற்போது நீச்சல் குளத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சன்டிவி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை ஒளிபரப்பான தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை விட எதிர்நீச்சல் சீரியல் அதிகமான டிஆர்பி ரேட்டிங் பெற்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலங்கள் என்ற மெகாஹிட் தொடரை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வருகிறார்.

ஆணாதிக்கம் படைத்த ஒரு குடும்ப தலைவனை அந்த வீட்டுக்கு வரும் மருமகள்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை இல்லாத வகையில் டிஆாபி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

publive-image

அதோடு மட்டுமல்லாமல் இந்த சீரியல் குறித்து ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்துதான். இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் இவர்தான் இந்த சீரியலின் முக்கிய துருப்புச்சீட்டு என்று கூறும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

publive-image

சினிமாவில் நடிகர் இயக்குனர் என்று முத்திரை பதித்த மாரிமுத்து தற்போது சின்னத்திரையின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருக்கு அடுத்தப்படியாக எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கவனம் ஈர்த்துள்ள கேரக்டர் ஆதிரை. இந்த கேரக்டரில் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில், கடந்த வார எபிசோட்டில் ஆதி குணசேகரன் தனது தங்கை ஆதிரைக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துவிட்டார்.

publive-image

இதனால் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதில் ஆதிரையாக நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் தற்போது நீச்சல் குளத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இவரை சமூகவலைதளங்களில் பலரும் ஃபாலோ செய்து வருகின்றனர்.

publive-image

இதனால் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம ஆதிரையா என்று வியந்து போய் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment