Advertisment

எதிர் நீச்சல் ஹீரோ அம்மாவும் சன் டி.வி நடிகை: வியக்க வைக்கும் குடும்ப பின்னணி

எதிர்நீச்சல் சீரியலில் அருண் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாணக்கியனின் நிஜமான அம்மா பிரபல சீரியல் நடிகை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun TV, Sun tv Ethirneechal serial Arun, Ethirneechal serial actor Chanakya, Ethirneechal serial actor arun real mother and father fans wondering, எதிர்நீச்சல் ஹீரோ அருண் ரியல் அம்மா, பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் ஆச்சரியம், Ethirneechal serial, actor Chanakya real mother and father fans wondering

எதிர்நீச்சல் சீரியல் அருண்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அருண் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாணக்கியனின் நிஜமான அம்மா பிரபல சீரியல் நடிகை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, அவருடைய அப்பாவும் மலையாள நடிகர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அருண் காதாபாத்திரத்தில் நடிகர் சாணக்கியன் நடித்து வருகிறார். இந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சீரியலில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களால் ஈர்க்கப்படும் ரசிகர்கள், தங்கள் அபிமான சீரியல் நடிகைகள், நடிகர்களின் நிஜ வாழ்க்கையைப் பற்றி ஆர்வத்துடன் தெரிந்துகொள்கின்றனர். அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே உணரத் தொடங்கிவிடுகின்றனர்.

அந்த வகையில், எதிர் நீச்சல் சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் சாணக்கியன் பார்வையாளர்களால் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டு ரசிகர்களாக உள்ளனர். எதிர் நீச்சல் சீரியலில் அருணாக நடிக்கும் சாணக்கியனின் அம்மா யார்? அப்பா யார் என்பது தெரியவந்ததை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சாணக்கியன் மட்டுமல்லாமல் அவருடைய வீட்டில் அவருடைய அம்மாவும் சின்னத்திரை நடிகையாக தான் இருந்து வருகிறாராம். அதே போல, அவருடைய அப்பாவும் மலையாள நடிகராக உள்ளார்.

சாணக்கியன் எதிர்நீச்சல் சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகர் சாணக்கியன் எதிர்நீச்சல் சீரியலுக்கு வருவதற்கு முன்பே பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியலில் கோபியின் மகன் கேரக்டரில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதைத் தொடர்ந்து சினிமாவில் பல நடிகர்களின் குழந்தை நட்சத்திரங்களாகவும் நடித்திருக்கிறார்.

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன "அவள் பெயர் தமிழரசி" திரைப்படத்தில் சின்ன வயது ஜெய் ஆக நடித்துள்ளார். பரமசிவன் திரைப்படத்தில் நடிகை லைலாவின் தம்பியாக நடித்திருப்பார். அப்போது நடிகர் அஜித் உடன் இவர் கியூட்டாக சேட்டைகள் செய்து கொண்டிருப்பார். அது குறித்து சமீபத்தில் கூட அந்த மலரும் நினைவுகளை சாணக்கியன் பகிர்ந்திருந்தார்.

மேலும், சாணக்கியன் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி திரைப்படத்தில் குழந்தையாகவும் நடித்திருப்பார்.

நடிகர் சாணக்கியன் சின்னத்திரை சீரியல் நடிகை ஆன கீதா சரஸ்வதியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் வெள்ளி திரையிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சாணக்கியனின் அப்பாவும் மலையாள நடிகராக தான் இருக்கிறாராம். சமீபத்தில் அவர் நடித்த வெப் சீரிஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதைப் பற்றி கீதா சரஸ்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

எதிர்நீச்சல் சீரியலில் அமைதியின் சிகரமாகவே அண்ணன் பேச்சை தட்டாத அருணாக இருந்து வரும் சாணக்கியன் நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் இல்லையாம்.

அண்மையில், நடிகர் சாணக்கியன் லயோலா காலேஜில் பட்டம் வாங்கியிருந்தார். அந்த புகைப்படங்களை அவருடைய தாயார் சரஸ்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment