/tamil-ie/media/media_files/uploads/2017/08/z92.jpg)
பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கரகாட்டக்காரன், குறத்திமகன், இதயக்கனி, படிக்காத பண்ணையார், சென்னை - 28 உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும் அன்றைய நாளில் வெளிவந்த "கர்ணன்" திரைப்படத்தில் சல்லியன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அறியச் செய்தவர். "கரகாட்டக்காரன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நீங்கா புகழ் பெற்றார் சண்முகசுந்தரம்.
இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ""நடிகர், மாமா, தாத்தா, நண்பர் என்று இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எனக்கு மிகவும் பிடித்த நடிகரான சண்முகசுந்தரம் இனி நம்மிடம் இல்லை. என்னுடைய எல்லா படங்களிலும் அவரது பங்கு இருந்தது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Actor, uncle, thatha, friend and more.. My fav cult actor mr shanmugasundaram is no more! He was part of all my movies! May his soul RIP pic.twitter.com/rA6DKZOL6C
— venkat prabhu (@vp_offl) 15 August 2017
நடிகர் நிதின் சத்யா தனது ட்விட்டரில், "கர்ணன், கரகாட்டக்காரன், சென்னை 28. மிக நீண்ட பயணம் இது. எவ்வளவு காலம் கிரிக்கெட் இருக்குமோ, அவ்வளவு காலமும் உங்கள் நினைவு எங்களிடையே இருக்கும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Carnan, karakatakaran, chennai28. The journey was indeed long. As long as cricket is there u will be remembered RIP #ShanmugaSundaram ????????
— Nitinsathyaa (@Nitinsathyaa) 15 August 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.