இவங்க அப்பவே அப்பிடி... 40 ஆண்டுக்கு முன் பிகினியில் திணறடித்தவர்; இந்த நடிகை யார் தெரியுதா?

40 ஆண்டுகளுக்கு முன்பு பிகினி உடையில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

40 ஆண்டுகளுக்கு முன்பு பிகினி உடையில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
jeya sri

80 காலக்கட்டத்தில் அனைவரும் அறிந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயஸ்ரீ. பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.ஜெயலட்சுமியின் பேத்தியான ஜெயஸ்ரீக்கு திரைத்துறை புதிதல்ல. ஜெயஸ்ரீயின்  தாத்தாக்கள்  எஸ்.ராஜம், எஸ்.பாலச்சந்தர் இருவருமே இசையமைப்பாளர்கள் தான். நடிகை ஜெயஸ்ரீ கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான ’தென்றலே என்னைத் தொடு’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Advertisment

இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மோகன் ஹீரோவாக நடித்திருந்தார்.மேலும், தேங்காய் சீனிவாசன், காந்திமதி, வெண்ணிறாடை மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பல வருட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் ஸ்ரீதர் தனது பாணியில் இருந்து விலகி இயக்கிய படம் தான் ‘தென்றலே என்னைத் தொடு’.

தான் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளியின் மகளை, அவர் முதலாளியின் மகள் என்பது தெரியாமல் மோகன் காதலிக்கிறார். வேறொரு பெண்ணுடன் மோகனுக்கு நட்பு இருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு அவரை பிரிகிறார் நாயகி. சில வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது நாயகி, நாயகன் பக்கம் சாய்கிறார். இறுதியில் இருவரும் ஒன்றிணைகிறார்களா? என்பதே படத்தின் கதை.

ja

'தென்றலே என்னைத் தொடு’ படத்தின் ஹீரோ இளையராஜாவும், அவரது பாடல்களும் தான். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடலுக்காகவே  ரசிகர்கள் திரும்ப திரும்ப இந்த திரைப்படத்தைப் பார்த்தனர். அதிலும் குறிப்பாக ’புதிய பூவிது பூத்தது’ பாடலில் நடிகை ஜெயஸ்ரீ நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார். ஜெஸ்ரீயின் நீச்சல்உடை தோற்றத்துக்காகவே இளைஞர்கள் திரையரங்கை மொய்த்தனர்.

Advertisment
Advertisements

மகேந்திரனின் 'நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெற்ற அசோக்குமார் ’தென்றலே என்னைத் தொடு’ படத்தில் நடிகை ஜெயஸ்ரீயின் அழகை தனது கேமரா மூலம் அள்ளிக் காட்டினார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மற்றொரு பாடலான ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ பாடல் இன்று வரையில் ரசிகர்களின் விருப்பமான பாடலாக உள்ளது.

இளையராஜா இசையில் 'தென்றல் வந்து என்னைத் தொடும்’ பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். மற்ற பாடல்கள் அனைத்தும் வாலி எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது. இதையடுத்து, நடிகை ஜெயஸ்ரீ பிசியான நடிகையாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகு ‘பிஸ்தா’, ’காதல் 2 கல்யாணம்’, ’மணல் கயிறு 2’  போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
 
 

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: