சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா... 60 வயதில் 2-வது திருமணம்; 9 மொழிகள் 300 படங்கள் நடித்த இவரை தெரியுமா?

ரஜினி, விஜய் போன்ற பிரபல நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜினி, விஜய் போன்ற பிரபல நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
புதுப்பிக்கப்பட்டது
New Update
ashish

பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‘கில்லி’ திரைப்படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்திருப்பார். நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த 1991-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான  ‘கால் சந்தியா’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர். வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தும் ஆஷிஷ் வித்யார்த்தி தனது மூன்றாவது படமான  ‘த்ரோகால்’ (Drohkaal)  படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். 

Advertisment

இவர் கடந்த 2001-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகனார். தொடர்ந்து,  ‘ஏழுமலை’, ‘பகவதி’, ‘தமிழன்’, ‘தம்’, ‘கில்லி’, ‘ஏய்’, ‘ஆறு’,  ‘மலைக்கோட்டை’, ‘குருவி’, ‘பீமா’, ‘அனேகன்’ என பல படங்களில் முண்ணனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில்  ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘இறைவன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த 2001-ஆம் ஆண்டு முன்னாள் நடிகை சகுந்தலா பருவாவின் மகள் ரஜோஷி பருவாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 21 வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, ரஜோஷி பருவாவை  கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தொடர்ந்து 2023-ம் ஆண்டு அசாமைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபாலியை திருமணம் செய்துகொண்டார். 

அப்போது நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு வயது 60 ஆகும் . இவர்களது திருமணம் எளிய முறையில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த திருமணம் குறித்து நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி கூறுகையில், “எனது வாழ்வில் ரூபாலியை திருமணம் செய்துகொண்டது புதிய உணர்வை தருகிறது. ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி பழகிய பின் இருவரும் எங்கள் உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினோம்” என்று கூறியிருந்தார்.

Advertisment
Advertisements

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்தது குறித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களி முன் வைத்தனர். இதையெல்லாம், கண்டுகொள்ளாத ஆஷிஷ் வித்யார்த்தி தந்து திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: