/indian-express-tamil/media/media_files/2025/10/14/tpo-2025-10-14-11-14-39.jpg)
சினிமாத் துறையில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் நடிகர்களாக மாறுவது சகஜமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை அம்மா, அக்கா, தங்கை, மகள், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் காலம் காலமாக சினிமாவில் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் நடிகர் சூர்யா - கார்த்தி- சிவக்குமார் ஆகியோர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் தான்.
அதேபோன்று, எஸ்.ஏ. சந்திர சேகர் தன் மகன் விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய நடிகராக்கினார். அதேபோன்று இயக்குநர், நடிகரான பாக்யராஜின் மகன் சாந்தனுவும் தனது தந்தையின் அடையாளத்தை வைத்து தான் சினிமாவில் நுழைந்தார். இதேபோன்று மலையாளத்தில் மம்முட்டி மிகப்பெரிய நடிகராக உள்ளார். அதேபோன்று அவரதும் மகனும் பிரபல நடிகராக இருக்கிறார். நடிகர் ஜெயராம் - காளிதாஸ் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் தான்.
பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் பாலிவுட்டை கலக்கி வருகின்றனர். இந்த வரிசையில் இடம் பிடித்தவர்கள் தான் நடிகை கீர்த்தி சனோன் மற்றும் நுபுர் சனோன். பிரபல நடிகையான கீர்த்தி சனோன் 'நெனோக்கடைன்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இவர் ‘மிமி’ என்ற படத்தில் வாடகை தாயாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருது வென்றார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘தேரே இஸ்க் மே’ படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். கீர்த்தி சனோனின் தங்கை நுபுர் சனோன் ஆரம்ப காலத்தில் இசை ஆல்பத்தில் நடித்து கொண்டிருந்த நிலையில் தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், அக்கா, தங்கைகளான கீர்த்தி சனோன் மற்றும் நுபுர் சனோனுடன் இணைந்து பிரபல நடிகர் ஒருவர் நடித்துள்ளார். அது வேறு யாரும் இல்லை நடிகர் அக்ஷய்குமார் தான். அதாவது, ‘ஹவுஸ்புல் - 4’ மற்றும் ’பச்சான் பாண்டே’ உள்ளிட்ட படங்களில் நடிகை கீர்த்தி சனோனுடன் இணைந்து அக்ஷய் குமார் நடித்துள்ளார். அதேபோன்று, ‘பிலால்’ படத்தில் நுபுர் சனோனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.