/indian-express-tamil/media/media_files/2025/10/01/nayan-2025-10-01-11-53-11.jpg)
பாலிவுட் பிரபலங்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்க... 50 செகண்ட் விளம்பரத்துக்கு ரூ.5 கோடி வாங்கும் தமிழ் சினிமா பிரபலம்; இவங்க யார் தெரியுதா?
திரைத்துறையில் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஆலியாபட் போன்ற நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை வாங்குகின்றனர். இவர்கள் தான் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளா என்றால் அதுதான் இல்லை.
இவர்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவிற்கு ஒரு நடிகை தரமான செயல் செய்துள்ளார். தமிழ் நடிகை ஒருவர் தான் நடித்த விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதாவது, இந்த நடிகை ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அந்த விளம்பரத்தில் நடிக்க, அவர் 50 வினாடிகளுக்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது அவரது ஒரு படத்திற்கான சம்பளம் என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.
சினிமாத் துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். 2018-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியாவின்(Forbes India) ‘பிரபலங்கள் 100’ பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய முன்னணி பெண் நடிகை இவர்தான்.
இந்த நடிகை 20 ஆண்டுகளில் 80 திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை நயன்தாரா தான்.
நடிப்பில் ஆசை இல்லாமல் சினிமாத் துறையில் நுழைந்த நடிகை நயன்தாரா தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக வலம் வருகிறார். கடந்த 2015-ல் 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தில் பணிபுரியும்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு, வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா டாடா ஸ்கை நிறுவனத்தின் 50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிப்பில் கடைசியாக 'டெஸ்ட்' திரைப்படம் வெளியானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.