/indian-express-tamil/media/media_files/2025/10/31/vijaya-2025-10-31-12-15-03.jpg)
நடிகை விஜயசாந்தி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 1990-களில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படங்களுக்கு இணையாக விஜயசாந்தி நடித்த ஆக்ஷன் படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. விஜயசாந்தி துணிச்சலான ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் திறமையால், விஜயசாந்தி தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வந்தார்.
இவருடைய ஆக்ஷன் படம் தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. விஜயசாந்தி படங்கள் பல முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் படங்களுக்கே கடும் போட்டியாக அமைந்தது. இப்படி, சினிமாவில் தொடர்ந்து ஆக்ஷன் நாயகியாக வலம் வந்த விஜயசாந்தி 1998-ம் ஆண்டு அரசியலில் களம் இறங்கினார். அவர் அரசியலில் நுழைந்த பிறகு படிப்படியாக படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டே வந்தார்.
நடிகை விஜயசாந்தி கடைசியாக கடந்த 2006-ஆம் ஆண்டு ’நாயுடம்மா’ படத்தில் நடித்தார். அதன் பின்னர், அவர் சினிமாவில் இருந்து விலகினார். அதன்பின்னர், கடந்த 2020-ஆம் ஆண்டு ‘சரிலேறு நீகேவ்வறு' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், நடிகை விஜயசாந்தி சம்பளம் வாங்காமல் நடித்த திரைப்படம் குறித்து இயக்குநர் பாரதி கண்ணன் மனம் திறந்துள்ளார்.
அவர் பேசியதாவது, "நடிகை விஜய சாந்தியும் கிட்டதட்ட ரம்யா கிருஷ்ணன் மாதிரிதான். ரொம்ப அமைதியாக இருப்பார்கள். ‘பண்ணாரி அம்மன்’ படம் நடிக்கும் பொழுது அவர் சம்பளம் வாங்கவில்லை. அம்மன் வேடத்தில் முதன் முதலாக என் படத்தில் தான் நடித்தார். அடிதடியில் கலக்கும் விஜய சாந்தியை வைத்து அம்மன் படம் பண்ண வேண்டும் என்பது எனக்கு ஆசை. ‘பண்ணாரி அம்மன்’ திரைப்படத்தின் சம்பளத்திற்கு பதிலாக அவர் அப்படத்தின் தெலுங்கு உரிமையை கேட்டார். ‘பண்ணாரி அம்மன்’ திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது” என்றார்.
நயன்தாராவுக்கு முன்பு லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட விஜயசாந்தி அம்மனாக நடித்த படம் ‘பண்ணாரி அம்மன்’. அவரது 175-வது படமாக இது அமைந்தது. இந்த படத்தில் அம்மனாக அசத்தலாக விஜயசாந்தி நடித்திருப்பார். 2002-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கரண் நடித்திருப்பார். பாரதி கண்ணன் இயக்கிய இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருப்பார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us