பெண்களை கடத்த வந்த கும்பல்; களத்தில் இறங்கி சண்டை போட்ட எம்.ஜி.ஆர்; படப்பிடிப்பில் நடந்த ரியல் சம்பவம்!

பெண்களை கடத்த வந்த கும்பலிடம் நடிகர் எம்.ஜி.ஆர் சண்டை போட்டது குறித்து நடிகை லட்சுமி மனம் திறந்துள்ளார்.

பெண்களை கடத்த வந்த கும்பலிடம் நடிகர் எம்.ஜி.ஆர் சண்டை போட்டது குறித்து நடிகை லட்சுமி மனம் திறந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
mgr

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை மக்கள் மத்தியில் தனக்கான இடத்தைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும்  தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார். அன்று முதல் இன்று வரை நல்ல மனிதருக்கு இலக்கணமாக எம்.ஜி.ஆர் அமைந்துள்ளார்.

Advertisment

சிறுவயதில் ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு, சதிலீலாவதி என்ற படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்த இவர், 10 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக உருவெடுத்தார்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை.அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் 'நாடோடி மன்னன்’ என்ற படத்தை இயக்கிய தயாரித்து நடித்து வெற்றி கண்டார். அதன்பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்தார். இன்று வரையிலும் பலரும் எம்.ஜி.ஆரை போன்று உதவி செய்து பழகுங்கள் என்று சொல்லி வருகின்றனர். 

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் பெண்களை கடத்த வந்த கும்பலிடம் எம்.ஜி.ஆர் சண்டை போட்டது குறித்து நடிகை லட்சுமி மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “மாட்டுக்கார வேலன் படத்தின் போது எம்.ஜி.ஆர் சார் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது நான் போய் என்ன சார் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் எல்லோருக்கும் நட்ஸ் எல்லாம் வரும் போய் சாப்பிடுங்க என்றார். எம்.ஜி.ஆர் சாருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை பேக்அப் பண்ணுங்க, பெண்களை எல்லாம் அனுப்பிவிடுங்கள் என்று சொன்னார். எம்.ஜி.ஆர் சார் எங்க இருந்து கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. 

Advertisment
Advertisements

பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கடத்துவதற்காக ஒரு கும்பல் வேனில் வருகிறது. பிரச்சனை என்றதும் பெண்களை எல்லாம் அனுப்பிவிட்டார். நான் பார்க்கிறேன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த சண்டை பயிற்சியாளர்கள் எல்லாரும் அந்த கும்பலை அடித்தார்கள். அப்போது எம்.ஜி.ஆரும் இறங்கி அடித்தார். உண்மையாக சண்டை போடும் ஒரு கதாநாயகனை அன்று நான் பார்த்தேன். அத்தனை பேரையும் அடித்து நொருக்கிவிட்டு நாங்கள் எல்லாம் வந்து உட்காந்த பின்னர் படப்பிடிப்பை ஆரம்பித்தார்” என்றார்.

Lakshmi Mgr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: