/indian-express-tamil/media/media_files/2025/10/14/shivaji-2025-10-14-16-05-51.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கலைப்புலி எஸ். தாணு. இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான ‘யார்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அன்று முதல் இன்று வரை பல்வேரு படங்களை தயாரித்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ் போன்றவர்களின் படங்களையும் தயாரித்துள்ளார். அந்த காலம் முதல் தற்போதைய தலைமுறை வரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை தெரியாத ஆட்களே இல்லை.
இவரது படங்களுக்கான தனித்துவமான விளம்பர உத்திகள் இந்திய அளவில் அவருக்குப் புகழைத் தேடித்தந்தது. தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தை இவர் தயாரிக்கிறார். முதன் முதலாக வெற்றி மாறன் - சிம்பு கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி பிசியான தயாரிப்பாளராக வலம் வரும் கலைப்புலி எஸ்.தாணு, சிவாஜி குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, "என் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் என் மனைவியைக் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக செல்ல இருந்தோம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவாஜி தன் மனைவி கமலா அம்மாவுடன் என் வீட்டிற்கு வந்தார். எனக்கு தூக்கிவாரி போட்டுவிட்டது. என் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை என் மனைவியிடம் சொல்லாமலேயே நாங்கள் எல்லா வேலைகளும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
சிகிச்சைக்காக செல்லும் பொழுது கூட மயக்க ஊசி போட்டு மயக்கத்தில் தான் கொண்டு சென்றோம். வீட்டிற்கு சிவாஜி கணேசன் வந்ததும் நான் அவரிடம் என் மனைவிக்கு அவரின் நோய் பற்றி தெரியாது என்று சொன்னேன். அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். இருவரும் என் மனைவியை நலம் விசாரித்தார்கள். சிவாஜியை பார்த்ததும் என் மனைவி எழுந்து பூஜை அறைக்கு சென்று பிரசாதம் எடுத்து வந்து அவர் கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார்.” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.