/indian-express-tamil/media/media_files/2025/11/01/shivaji-2025-11-01-16-11-21.jpg)
நடிகர் எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் புலமைப்பித்தன். பிரபல கவிஞரான புலமைப்பித்தனை எம்.ஜி.ஆர் முதல்வராக பொறுப்பேற்ற போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரசவைக் கவிஞராக நியமித்தார். இதையடுத்து கவிஞர் புலமைப்பித்தன் சில ஆண்டுகள் பணி செய்தார். தமிழக அரசின் பெரியார் விருதை பெற்றுள்ள புலமைப்பித்தன் நான்கு முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவரது பாடல்கள் இன்றும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. ராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் கடந்த 1935-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்தார். சிறு வயதிலே கவிதைகள் படைப்பதில் ஆர்வம் கொண்ட இவர், சென்னைக்கு இடம் பெயர்ந்து கவிதைகள் இயற்றி வந்தார். சென்னை வந்த இவர் ஆரம்பத்தில் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
அதன்பின்னர் 1968-ஆம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 'குடியிருந்த கோயில்' படத்திற்காக ’நான் யார்.. நீ யார்..’ என்ற பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார் புலமைப்பித்தன். அதனை தொடர்ந்து எம்.ஜி-ஆரின் பெரும்பாலான படங்களுக்கு பாடல்கள் எழுதி, அவரின் அன்பை பெற்ற ஆஸ்தான பாடலாசிரியராக உருவெடுத்தார் புலமைப்பித்தன்.
இந்நிலையில், கவிஞர் புலமைப்பித்தன், சிவாஜிக்காக தான் எழுதிய பாடல் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “அன்பு கரங்கள் படத்தில் சிவாஜிக்கு தான் முதல் முதலாக பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த பாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. உண்மையை சொல்லபோனால் நான் நடிகையர் திலகம் சிவாஜி கணேசனின் பரம ரசிகன். அதன்பின்னர், எம்.ஜி.ஆரின் ‘குடியிருந்த கோயில்’ திரைப்படத்தின் மூலம் நான் பாடல்கள் எழுதினேன். அவருடைய ஏராளமான படங்களுக்கு பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது” என்றார்.
கவிஞர்கள் கண்ணதாசன், வாலிக்கு நிகராக புலமைப்பித்தன் பாட்டு எழுதியிருந்தாலும் அவர்களை போல் இவர் பிரபலமாகவில்லை. கவிஞர் வாலிக்கு அடுத்தபடியாக பேசப்பட வேண்டியவர் புலமைப்பித்தன். அருமையான பாடல்களை் இவர் எழுதி இருந்தாலும் கண்ணதாசன், வாலியை போல் மக்களிடையே இவரை போன்றவர்கள் வாசம் பெறவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us