இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் காதல், கல்யாணத்தில் முடியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது இந்த வீடியோ.
ஒரு தனியார் ஆடை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள விராட் மற்றும் அனுஷ்கா, காதல் ரசம் சொட்ட சொட்ட பேசும் வகையில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கல்யாணத்திற்கு சென்றிருக்கும் இருவரும், அங்கு அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் பேசிக் கொள்வதை தங்களுக்கு பிடித்தவாறு டப்பிங் செய்து பேசுவது போல் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசும் கற்பனை மாப்பிள்ளை விராட், 'ஒரு மாதத்தில் பதினைந்து நாள் நான் சமைப்பேன்' என்கிறார். அதற்கு பதில் அளிக்கும் கற்பனை மணப்பெண் அனுஷ்கா, 'அப்படி சமைத்தால், ருசியை பற்றி குறை சொல்லாமல் நான் சாப்பிடுவேன்' என்று கூறுகிறார்.
இப்போது அனுஷ்கா பேசுகையில், 'நான் உனது அனைத்து ரகசியங்களையும் பத்திரமாக பாதுகாப்பேன்' என்கிறார். இதற்கு பதில் தரும் விராட், 'உன்னை எனக்காக நான் மாற்ற மாட்டேன். நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே உன்னை ஏற்றுக் கொள்வேன்' என்கிறார்.
தொடர்ந்து பேசும் அனுஷ்கா, 'சில சமயங்களில் மட்டும் நீ கேரம் கேமில் வெற்றி பெற நான் அனுமதிப்பேன்' என்கிறார். இதற்கு பதில் அளிக்கும் விராட், 'எந்த தொலைக்காட்சி ஷோவின் இறுதி போட்டிகளையும் நீயின்றி நான் தனியாக பார்க்க மாட்டேன்' என்கிறார்.
இப்போது விராட், "நான் உனக்காக எப்போதும் ஃபிட்டாக இருப்பேன். ஆனால், உனது கண்களில் எப்போதும் அளவற்ற காதல் இருக்க வேண்டும்" என்று கூற, "நீ அப்படி இல்லையென்றாலும், நான் கவலைப்பட மாட்டேன்" என்கிறார். அனுஷ்கா.
தொடர்ந்து பேசும் அனுஷ்கா, 'நீ அடிக்கடி என்னை செல்லப் பெயர் சொல்லிக் கூப்பிடாதே' என்கிறார். பேபி, ஷோனா, க்யூட்டி போன்றவை இவர்களது செல்லப் பெயர்களாம்.
இது தான் கிளைமேக்ஸ் சீன். இருவரும் நேருக்கு நேராக கண்களை பார்த்து, 'எப்போதும் நான் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்' என்று உருக்கமாக கூறி, தங்களது கற்பனை திருமண வாழ்க்கை கனவை முடிக்கின்றனர்.
சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்கப்பா இவங்களுக்கு!!!
https://www.youtube.com/embed/EaQIlKnpf_I