மீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்

11 ஆண்டுகள் கழித்து அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ என்ற பெயரில் தயாராகிறது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 23-ஆம்...

நடிகர் வடிவேலு நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி. இத்திரைப்படத்தை சங்கர் தயாரித்தார். இப்படத்தின் இயக்குநர் சிம்புதேவன். இந்நிலையில், 11 ஆண்டுகள் கழித்து அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ என்ற பெயரில் தயாராகிறது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 23-ஆம் தேதி வெளியானது. அன்று முதலே படப்பிடிப்பும் ஆரம்பமானது என படக்குழுவினர் தெரிவித்தனர். இத்திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார். இயக்குநர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் முதல் பாகத்தில், ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருக்கும் குறுநில மன்னராக வடிவேலு நடித்திருப்பார். நகைச்சுவை நடிகனாகவே அறியப்பட்ட வடிவேலு, இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றார். இரட்டை வேடங்களில் நடித்த வடிவேலு, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்திலும், உக்கிரபுத்திரன் என்ற சீரியஸான கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

‘ககக போ’ என்ற வசனம், அரசனை காட்டில் கரடி காரித்துப்பும் காட்சி, மாடி கைப்பிடியில் சறுக்கிக்கொண்டே மன்னர் இறங்கி வருவது, அரியாசனத்தில் மன்னர் உறங்குவது, வெள்ளைக்கொடி காட்டி எதிரி நாட்டு மன்னனை திருப்பி அனுப்புவது என, ஒரு நாட்டுக்கு மன்னர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ அப்படியிருந்து அசத்தியிருப்பார் நடிகர் வடிவேலு.

விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்த்த இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் பாகத்தில் ஆங்கிலேய ஆட்சியை, நிகழ்கால அரசியலுடன் ஒப்பிட்டு ‘அரசியல் பகடி’ திரைப்படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2 இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ’ராஜ டரியலுடன் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்’ என அசத்தலாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்திரைப்படம் குறித்து, ஏற்கனவே இயக்குநர் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டார்.

×Close
×Close