/tamil-ie/media/media_files/uploads/2017/05/roger-moore-759.jpg)
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தனது 89-வது வயதில் காலமானார்.
கடந்த 1973-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரையில் அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். மேலும், அந்த காலகட்டங்களில் 7 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்து உலகளவில் பிரபலமானார்.
சர் ரோஜர் மூர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டு யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதரக ரோஜர் மூர் தேர்வானார்.
With the heaviest of hearts, we must share the awful news that our father, Sir Roger Moore, passed away today. We are all devastated. pic.twitter.com/6dhiA6dnVg
— Sir Roger Moore (@sirrogermoore) May 23, 2017
சர் ரோஜர் மூர் தனது மனைவி கிறிஸ்டினா தோல்ஸ்ட்ரப் மற்றும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சுவிச்சர்லாந்தில் அவர் காலமானார். ரோஜர் மூர் காலமானதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். புற்று நோயால் அவதிப்பட்டு குறைந்த காலமே இருந்த போதிலும், புற்றுநோயை தைரியமாக எதிர்கொண்டார் என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.