ரஜினி பற்றி நான் அப்படி சொல்லவில்லை; கவுதம் கார்த்திக் விளக்கம்! (வீடியோ)

‘இவன் தந்திரன்’ பட புரமோஷனுக்காக திருச்சி வந்திருந்த நடிகர் கவுதம் கார்த்திக்கிடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, “ரஜினிகாந்த் என்றுமே சூப்பர் ஸ்டாராகவே தான் இருக்க வேண்டும். அரசியலுக்கு வரக் கூடாது” என்று அவர் பதிலளித்தாக செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தி சமூக ஊடகங்களிலும் பரவத் தொடங்கின. இதனால், ரஜினி ரசிகர்கள் தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கவுதம் கார்த்திக் தற்போது அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து, தான் சொன்ன பதில் தவறாக எழுதப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், தான் உண்மையில் என்ன சொன்னேன் என்பது குறித்தும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே படம் நடித்துள்ள, மிகவும் இளம் நடிகரான கவுதம் கார்த்திக்கிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசி, அந்த விஷயம் எல்லாம் சர்ச்சை ஆகும் நிலைமை இன்று வந்துவிட்டது. இவையெல்லாம், தனது நிலைப்பாடு என்ன என்பதை ரஜினி விளக்காததால் வந்த விளைவுகளே.

×Close
×Close