scorecardresearch

பிரியங்கா சோப்ராவை சிதைத்த அரசியல்வாதிகள்

48 மணி நேரம் கஷ்டப்பட்டு அவர் இந்த ஓவியத்தை உருவாக்கினார். பிரியங்கா சோப்ரா போல அப்படியே தத்ரூபமாக இருந்தது அந்த ஓவியம்.

பிரியங்கா சோப்ராவை சிதைத்த அரசியல்வாதிகள்

சஞ்சய் லீயா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. குறிப்பாக, ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனை என்ற அமைப்பு, பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்து வருகிறது. பலமுறை ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போராட்டங்கள் நடத்தியதோடு, செட்டின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ‘பத்மாவதி’ படத்தின் போஸ்டரில் உள்ள பிரியங்கா சோப்ரா படத்தை, குஜராத்தின் சூரத் நகரில் ரங்கோலி ஓவியமாக வரைந்திருந்தார் ஓவியர் கரண் கே. சுமார் 48 மணி நேரம் கஷ்டப்பட்டு அவர் இந்த ஓவியத்தை உருவாக்கினார். பிரியங்கா சோப்ரா போல அப்படியே தத்ரூபமாக இருந்தது அந்த ஓவியம்.

திடீரென என்கிருந்தோ வந்த 100க்கும் மேற்பட்ட கர்ன சேனை அமைப்பினர், ஓவியத்தை சிதைத்து அட்டகாசம் செய்தனர். இதனால் மனமுடைந்த ஓவியர் கரண் கே, ட்விட்டரில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். வருகிற நவம்பர் மாதம் 17ஆம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ராஜஸ்தானில் இந்தப் படத்தால் நிகழ்ந்துவரும் பிரச்னை காரணமாக டிசம்பர் 1ஆம் தேதிக்கு ரிலீஸைத் தள்ளிவைத்துள்ளனர். இப்படியே போனால் படம் ரிலீஸாகுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Goons destroy deepika padukone padmavati rangoli which took 48 hrs to create in seconds