Advertisment

திருமணத்துக்கு பிறகுதான் பிஸி… அமெரிக்க அதிபர் பைடனாக விரும்புகிறேன் - ஹன்சிகா

திருமணத்துக்குப் பிறகுதான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் நிஜ வாழ்க்கையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனாக விரும்புகிறேன் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hansika Modhwani, actress Hansika, Aadhi, charle, vinoth rajendran, finder, திருமணத்துக்கு பிறகுதான் பிஸி... அமெரிக்க அதிபர் பைடனாக விரும்புகிறேன் - ஹன்சிகா - சார்லி, வினோத் ராஜேந்திரன், ஃபைண்டர், Tamil cinema news, cinema news, Hansika news

நடிகை ஹன்சிகா

திருமணத்துக்குப் பிறகுதான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் நிஜ வாழ்க்கையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனாக விரும்புகிறேன் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.

Advertisment

நடிகை ஹன்சிகா தற்போது ஆதியுடன் பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹன்சிகா தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நடிகை. இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

publive-image

சினிமா உலகத்துக்கு நடிக்க வந்த குறுகிய கால கட்டத்திலேயே நடிகை ஹன்சிகா 50 படங்களில் நடித்துவிட்டார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மகா என்ற படம் வெளியானது. அது ஹன்சிகாவின் 50-வது படமாகும். அதில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா பஞ்சாப்பை சேர்ந்த தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா தற்போது தமிழில் நடிகர் ஆதியுடன் இணைந்து பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

பார்ட்னர் படத்தின் அப்டேட் இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்த நடிகை ஹன்சிகா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்த படத்தில் நான் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது மிகவும் எனக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. திருமணத்திற்கு பிறகு நான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் 5 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு பிறகும் நான் படங்களில் நடிக்க எனது கணவர் ஆதரவு அளித்து வருகிறார். அவர் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். அவர்தான் என் முதல் ரசிகர். எனது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. அவை நிறைவேறும் போது உங்களிடம் தெரிவிக்கிறேன். தமிழில் நான் 51-வது படத்தில் நடித்து முடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

நீங்கள் நிஜ வாழ்க்கையில் யாராக மாற விரும்புகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா “நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனாக மாற விரும்புகிறேன்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Hansika Motwani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment