The legend has performed more than 20,000 concerts to date and has won several awards including the National Film Awards : இசையுலகில் தனது தனித்துவமான பாடல்கள் மூலம் 4 தலைமுறை ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள இசையுலகின் மன்னன் இளையராஜா இன்று தனது 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1943-ம் ஆண்டு மதுரை பண்ணைப்புரத்தில் பிறந்தவர் ஞானதேசிகன். இவரை பள்ளியில் சேர்க்கும்போது ராசய்யாஎன்ற பெயரில் சேர்த்துள்ளனர். அதன்பிறகு இவரின் இசை குரு தன்ராஜ் மாஸ்டர் இவரின் பெயரை ராஜா என்று மாற்றியுள்ளார்.

இவருக்கு கங்கை அமரன், வரதராஜன் என்ற இரண்டு சகோதார்கள் உண்டு. இதில் வரதராஜன் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார கச்சேரிகளில் பாடும்போது அவருடன் சென்ற இளையராஜாவும் கச்சேரிகளில் பாட தொடங்கியுள்ளார். அதன் மூலம் சினிமா வாய்ப்பு வரவே, 1976-ம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான அண்ணக்கிளி என்ற படத்தின் மூலம் இவரது பெயரை இளையராஜா என்று மாற்றி தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
இந்த படம் வெளியான புதிதில் பொதுமான வரவேற்பு இல்லாமல் இருந்தாலும், படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்த படம் பின்னாளில் பெரிய வெற்றிப்படமாக அமைந்து இளையராஜாவின் சினிமா என்ட்ரியை வலிமையாக்கியது. அதன்பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா ஏராளமாக ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் பல இசையில் பல புதிய முயற்சிகளை கையண்டுள்ளார். அந்த வகயைில் கவிக்குயில் என்ற படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரீதகௌளை இசையயை பயன்படுத்திய பெருமை இளையராஜாவையே சாறும். திரைக்கதையின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இசையமைக்கும் இசையமைப்பாளர்களுக்கு இடையில் இவர் இசை மற்றும் பாடல்களுக்காக கதை எழுதிய நிகழ்வு தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.
அந்த வகையில் இளையராஜாவின் இசையை வைத்து எழுத்தப்பட்ட அரண்மனைக்கிளி, மற்றும் வைதேசி காத்திருந்தாள் என்ற இரு படங்களும் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. இந்த இரு படத்தின் பாடல்களும், இன்றைய தலைமுறை ரசிகர்கள் மத்தியில் ஒரு வகையான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றெ சொல்லலாம். அதேபோல் இளையராஜாவின் பாடலுக்கான சூழ்நிலையை வைத்து உருவாக்கிய படம் தான் கரகாட்டக்காரன்.

இந்த படத்தை இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இயக்கி இருந்தார். இப்படி இசையுலகில் பல அரிய சாதனைகளை படைத்துள்ள இளையராஜா, ஒருமுறை ஜப்பானில் எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே புதிதாக தயார் செய்யப்பட்ட இசைகருவி ஒன்றில் பல்வேறு வகையான இசை வாத்தியங்களை இசைத்து பதிவு செய்து வைத்துள்ளனர்.
இதை இசைத்து பார்த்த இளையராஜா, அந்த கருவியில் பதிவு செய்யப்படாத ஒரு இசையாக கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் இணைத்து புதிய இசையை உருவாக்கி அதில் பதிவு செய்தார். அப்போது ஜப்பான் கலைஞர்கள் அவரது திறமையை கண்டு வியந்துபோனார்கள்.
#InPics || இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இன்று!https://t.co/gkgoZMIuaK | #HBDIlaiyaraaja | #Ilayaraja | @ilaiyaraaja pic.twitter.com/oTqR9oJcQJ
— Indian Express Tamil (@IeTamil) June 2, 2022
இசையுலகில் சரித்திரம் படைத்துள்ள இளையராஜா தனது சகோதரியின் மகளா ஜீவா ராஜய்யாவை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜா பவதாரணி என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் யுவன் சங்கர் ராஜா இரண்டு தலைமுறை இளைஞர்களின் அஸ்தான இசையமைப்பாளராக மாறியுள்ளார். பவதாரணி பாடகியாவும், கார்த்திக் ராஜாவும் தமிழ்சினிமாவின் இசையமைப்பாளராகவும் உள்ளனர்.
கதைக்கு தகுந்தார் போல் யோசித்து இசையமைக்கும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் இயக்குநர் கதையை சொல்லும்போதே எந்த இடத்திற்கு எப்படி இசை அமைக்க வேண்டும் என்பது குறித்து இசைக்குறிப்புகளை எழுதும் ஒருசில இசையமைப்பாளர்களில் இளையராஜா முக்கியமானர். முன்னணி இசையமைப்பாளராக உள்ள அவரது மகன் கூட இசைக்குறிப்புகளை எழுதுவதில்லை.

ஆயிரம் படங்களுக்குமே இசையமைத்து சாதனை படைத்துள்ள இளையராஜா தமிழ் மட்டுமல்லது இந்திய சினிமாவில் பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1988-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இளையராஜா, 2010-ம் ஆண்டு பத்மபூஷன், 2018-ம் ஆண்டு பத்மவிபூஷன் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இசைக்காக்காக பல விருதுகளை குறித்துள்ளார்.
இசையுலகின் ராஜா என்றாலும், ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள இளையராஜா ஓய்வு நேரங்களில் திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆலயத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“