HBD Thalapathy Vijay: நடிப்பு, நடனம், பாடல், பாடி லாங்குவேஜ், காமெடி சென்ஸ், பஞ்ச் டயலாக்ஸ் என எல்லா விதத்திலும் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் நடிகர் விஜய் தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஆரம்ப காலத்தில் தவிர்த்திருந்தாலும், ஆக்ஷன் ஹீரோவான பிறகு பஞ்ச் டயலாக்குகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்படி விஜய்யின் மாஸான ‘பஞ்ச் டயலாக்குகளைப்’ பற்றி பார்ப்போம்.
கில்லி
/tamil-ie/media/media_files/uploads/2019/06/112212-22759831998_d89cdf3dde_b-1024x640.jpg)
இயக்குநர் தரணி இயக்கத்தில் வெளியான ‘கில்லி’ ரசிகர்களிடன் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ’ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லி டா’ என்ற வசனத்தை இன்னும் யாரும் மறக்கவில்லை!
போக்கிரி
/tamil-ie/media/media_files/uploads/2019/06/MV5BOTM2NzJlYzktZmE1Yy00ZjBlLWI1MjctZDZmZGY2ZjgxNmQzXkEyXkFqcGdeQXVyMjA4NjIzMTA@._V1_-686x1024.jpg)
நடிகரும் இயக்குநரும் பிரபுதேவா இயக்கியிருந்த இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகி, ‘போக்கிரி பொங்கல்’ என ரசிகர்களை மகிழ்வித்தது. இந்தப் படத்தில் விஜய்க்கும், போலீஸ் அதிகாரிக்கும் மோதல் ஏற்படும் இடங்களில் எல்லாம் வெறித்தனமான பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்து விடுவார் விஜய். முக்கியமாக ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா’ எனும் வசனத்தை இன்றும் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதே படத்தில் வரும் இன்னொரு பஞ்ச் வசனம் ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்’ என்பதை விஜய்யைப் பிடிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.
அதோடு போக்கிரி படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நீ பொழப்புக்கு தான் ரவுடி, நான் பொறந்ததுல இருந்தே ரவுடி’ என்ற வசனமும் ரசிகர்களிடன் ’தெறி’ ஹிட் ரகம் தான்!
திருமலை
/tamil-ie/media/media_files/uploads/2019/06/Happy-Birthday-Thalapathy-Vijay-1024x814.jpg)
இதில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். இதில் வரும் ‘வாழ்க்க ஒரு வட்டம் டா, இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்’ என்ற வசனத்தை சொல்லாத பொதுமக்களே கிடையாது என்பதற்கேற்ப, ரசிகர்களைத் தாண்டி கவனம் ஈர்த்தது.
குருவி
/tamil-ie/media/media_files/uploads/2019/06/64a86608ecafa77977daa5a885e769f1_a.jpg)
இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியை தழுவிய போதிலும், விஜய் ரசிகர்கள் குறைவில்லாமல் கொண்டாடினார்கள். இதில் வரும், “நம்ம பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும், ஆனா அடி சரவெடி” எனும் வசனம் ரசிகர்களிடம் மாஸ் ஹிட்.
துப்பாக்கி
/tamil-ie/media/media_files/uploads/2019/06/B0Sd_UVCQAAt4bv.jpg)
நீண்ட நெடிய வசனம் இல்லை, உடல் மொழியில் எந்த மாற்றமும் இல்லை, மூன்றே வார்த்தைகளில் முக பாவனை மூலம் இன்று வரை எவர் கிரீன் பஞ்ச் டயலாக்காக வலம் வந்துக் கொண்டிருக்கிறது “ஐ அம் வெயிட்டிங்” எனும் மந்திர சொல். விஜய் ரசிகர்களை தவிர்த்து அனைத்துத் தரப்பினரும் என்ஜாய் செய்த டயலாக்கும், படமும் இது என்றால் அது மிகையில்லை!