/indian-express-tamil/media/media_files/2025/10/17/diesel-2025-10-17-11-08-31.jpg)
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் ‘டீசல்’. இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின கதேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கே.பி.ஒய் தீனா, அபூர்வா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். வினய் இந்த படத்தில் வில்லனாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட ’டீசல்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘டீசல்’ திரைப்படம் தீபாவளி ரேஸில் முந்தியதா? இல்லையா? என்று பார்ப்போம்.
விமர்சனம்
டீசல் திரைப்படம் முதல் பாதியில் வழக்கமான கேங்ஸ்டர் படம் போல தொடங்கி இரண்டாம் பாதி முற்றிலும் சமூக அரசியல், த்ரில்லர் ஜானருக்கு மாறுகிறது. ஹரிஷ் கல்யாண் அற்புதமாக நடித்துள்ளார், இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி உள்ளார். அதுல்யா நன்றாக நடித்துள்ளார். திபுவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் நன்றாக இருந்தது. இயக்குநர் சண்முகம் ஒரு அற்புதமான மெசேஜ் உடன் ஒரு தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டும் என சதீஷ்குமார் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
#Diesel - Diesel - Starts off like usual gangster film in the first half and second half completely shifts into social - political thriller genre. Harish Kalyan impresses and comfortably moves to action avatar. Athulya looks pretty and has acted well. Dhibu Songs & BGM were good.…
— Sathish Kumar M (@sathishmsk) October 17, 2025
ஹரிஷ் கல்யாண் முழு படத்தையும் தன்னுடைய தோளில் சுமந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இயக்குனர் சண்முகம் முத்துசாமி எண்ணெய் அரசியலைப் பற்றி பேசும் ஒரு சமூக பொறுப்புள்ள படத்தை வழங்கியுள்ளார். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதி டிராமா ஜோனுக்குள் நுழைகிறது. அதுல்யரவி, வினய் ராய் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர் ஃபாப் பிளிக்ஸ் பதிவிட்டுள்ளார்.
#Diesel - #HarishKalyan shoulders the entire film and has been successful in it. Dir #ShanmugamMuthusamy has delivered a socio commercial film that talks about the oil politics. The first half is racy & the second half enters the drama zone. #AthulyaRavi#VinayRai has done their… pic.twitter.com/v7hoiZIAOM
— FabFlickz (@FabFlickz) October 17, 2025
முதல் பாதி டீசல் மாஃபியா vs வட சென்னை போலீஸ் என ஆக்ஷன் த்ரில்லராக நகர்கிறது. இரண்டாம் பாதி தேசிய வளங்களை கையாளுதல் என கண்டண்ட் வாரியாக நகர்கிறது. இயக்குநர் சண்முகம் முத்துசாமி முக்கியமான கதையை பேசியிருக்கிறார். நடிகர் ஹரிஷ் கல்யாண் வெற்றிகரமாக மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். அதுல்யா சிறப்பாக நடித்துள்ளார். துணை கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். திபுவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பல சேர்க்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்துகள் என்று ரமேஷ் பாலா என்பவர் பதிவிட்டுள்ளார்.
#Diesel [3.5/5] :
— Ramesh Bala (@rameshlaus) October 16, 2025
1st Half - Diesel mafia vs Police in North Chennai.. Action Thriller..
2nd Half - National Energy resources manipulation.. Content Oriented..
Kudos to Director @shan_dir for touching an important subject..@iamharishkalyan transitions successfully as a…
90-களின் முற்பகுதியிலிருந்து 2014-ஆம் ஆண்டு வரை இருந்த எண்ணெய் மாஃபியாவைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தில், வட சென்னை இளைஞனாக நடிப்பதன் மூலம் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது கம்ஃபோர்ட் சோனில் இருந்து வெளியே வருகிறார். இயக்குநர் சண்முகம் முத்துசாமி, இரண்டாம் பாதியில் ஏ.ஆர். முருகதாஸின் கத்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியுள்ளதாக தெரிகிறது என்று ராஜசேகர் என்பவர் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.