கார்த்தி படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

கார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

கார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
karthi

கார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

Advertisment

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸானது. அதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ‘வனமகன்’ சயிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இந்தப் படத்தில் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தயாரிக்கிறது. கார்த்தி விவசாயியாக நடிக்கும் இந்தப் படம், தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் ரிலீஸாகும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். சித்திரை மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. ரஜத், ஆர்.கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

Advertisment
Advertisements

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத்சிங் மறுபடியும் இந்தப் படத்தில் ஜோடி போடுகிறார். இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுதான் முதல்முறை.

Harris Jayaraj Karthi Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: