/indian-express-tamil/media/media_files/2025/09/28/heart-beat-2025-09-28-12-02-58.jpg)
ஓவரா நடிக்காதீங்க, இவ்ளோ போதும்; மூத்த நடிகருக்கு திருத்தம் சொன்ன 'ஹார்ட் பீட்' இயக்குனர்!
ஜியோ ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ‘ஹார்ட் பீட்’ என்ற வெப் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஒரு மருத்துவர் தன் சிறு வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து அநாதை இல்லத்தில் போட்டுவிடுகிறார். அந்த குழந்தை வளர்ந்து தன் அம்மாவை தேடி வருகிறது.
ஒரு கட்டத்தில் அந்த அம்மாவிற்கு தன் குழந்தை குறித்து தெரிய வரவே அவர் என்ன செய்கிறார் என்பது தான் இந்த வெப் தொடரின் கதைக்களம். இந்த வெப் தொடரின் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.
இதில், தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், கார்த்திக் குமார், கவிதாலயா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், ‘ஹார்ட் பீட்’ தொடரில் நடித்தது குறித்து நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் மனம் திறந்துள்ளார்.
அவர் பேசியதாவது, "முதலில் ‘ஹார்ட் பீட்’ வெப் தொடரில் நடிக்க சொன்ன போது எனக்கு பெரிதாக விருப்பம் இல்லை. அந்த நேரத்தில் நான் மிகவும் பிசியாக இருந்தேன். அதன்பிறகு, கதையாசிரியர் தீபக் சுந்தர்ராஜன் மற்றும் ஷியாம் ஆகியோர் என்னை வந்து சந்தித்தனர்.
இந்த வெப் தொடர் இவ்வளவு பிரபலமடையும் என்று நான் நினைக்கவில்லை. நேற்று எப்பிசோட் முடிந்ததும் எனக்கு ஒரு 50 போன் வந்தது. அந்த தொடரின் காட்சி குறித்து கேட்க. நான் எங்கு போனாலும் ‘ஹார்ட் பீட்’ தொடரில் நடித்த நடிகர் என்று தான் கூறுகிறார்கள்.
நான் 200 படங்களில் நடித்து கிடைக்காத புகழ் இந்த ஒரு வெப் தொடர் மூலம் கிடைத்துள்ளது. எனக்கு தீபக் நிறைய ஸ்பேஸ் கொடுத்தார். என்ன செய்கிறீர்களோ செய்யுங்கள் என்று சொன்னார்கள். என் மனைவி இறக்கும் காட்சியில் மட்டும் ரொம்ப ஓவரா பண்ண வேண்டாம் என்று இயக்குநர் கரெக்ஷன் சொன்னார்.
எனக்கு ரீனா பெண்ணை மிகவும் பிடிக்கும். அவள் என் மகள் போன்று இருப்பார். அதுவும் இல்லாமல் அந்த தொடரில் எனக்கும் அவருக்கும் மிகவும் ஒத்துப்போகும். இரண்டு பேரும் பெரிதாக பேசிக் கொள்ளமாட்டோம். நான் ஒரு அறையில் இருப்பேன். அவர் ஒரு அறையில் இருப்பார்.
நீங்க ஒரு வீட்டின் ஓனர். ரீனாவிற்கு உங்களுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருக்கிறது என்று மட்டும் தான் சொன்னார்கள். மற்றவை எல்லாம் நான் செய்வது தான். நான் இந்த வெப் தொடரில் டயலாக் பேசும் போது மிகவும் யோசித்து தான் பேசுப்வேன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.