scorecardresearch

‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் சக்சஸ்ஃபுக் ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டிவிட்ட நிலையில், ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார் சந்தானம்.

‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் பற்றிய விவரம் கிடைத்துள்ளது.

சந்தானம், வைபவி ஷாண்டில்யா நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் தயாரிப்பில், சேதுராமன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சிம்பு முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். விவேக், இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். அவருடன் பவர் ஸ்டார் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் வருகிற 22ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். காமெடி ஆக்‌ஷன் எண்டெர்டெயினரான இந்தப் படத்தின் ரன்னிங் டைம், 143 நிமிடங்கள். அதாவது, 2 மணி நேரம் 23 நிமிடங்கள்.

இதே தேதியில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் ரன்னிங் டைம், 159 நிமிடங்கள் 41 விநாடிகள். அதாவது, 2 மணி நேரம் 39 நிமிடங்கள் 41 விநாடிகள் ரன்னிங் டைமைக் கொண்டுள்ளது இந்தப் படம்.

சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருமே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டிவிட்ட நிலையில், ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார் சந்தானம். எனவேதான், சிவகார்த்திகேயன் படத்துடன் மோதவிட்டு தன் பலத்தை நிரூபிக்கப் போகிறார் சந்தானம் என்கிறார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Here is the details about santhanams sakka podu podu raja running time

Best of Express