scorecardresearch

ஹாக்கி பிளேயராக நடிக்கும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் ஆதி. இந்தப் படத்தில், ஹாக்கி பிளேயராக அவர் நடிக்கிறார்.

ஹாக்கி பிளேயராக நடிக்கும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படத்தில் ஹாக்கி பிளேயராக நடிக்கிறார் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, இண்டிபெண்டண்ட் ஆல்பம் மூலம் பிரபலமானவர். ‘க்ளப்புல மப்புல’ பாடல் மூலம் பிரபலமான இவரை, தான் இயக்கிய ‘ஆம்பள’ படத்துக்கு இசையமைக்க வைத்தார் சுந்தர்.சி. அதன்பிறகு ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை 2’, ‘கதகளி’, ‘கத்தி சண்டை’, ‘கவண்’, ‘மீசைய முறுக்கு’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது ‘இமைக்கா நொடிகள்’, ‘கலகலப்பு 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியராக இருந்த ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் இயக்குநராகவும், ஹீரோவாகவும் களமிறங்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

தொடந்து, அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் ஆதி. இந்தப் படத்தில், ஹாக்கி பிளேயராக அவர் நடிக்கிறார். அதற்காக, தீவிர ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தை, சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. ஹீரோயின் உள்ளிட்ட படக்குழு பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி, திருப்பதியில் ஆதிக்கு ரகசியமாகத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Hip hop tamizha aadhi new movie started