Advertisment

மும்பை ரோட்டில் ஆட்டோ ஓட்டி ஷாக் கொடுத்த பிரபல நடிகர்...

author-image
Vaishnavi Balakumar
Oct 11, 2018 18:11 IST
will smith in india

will smith in india

வெளியூரில் இருந்து கிளம்பி வந்தாராம் பிரபல நடிகர் ஒருவர். ஆனால் வந்த இடத்தில் நடிப்பு மட்டும் பார்க்காமல் ஆட்டோ சாகசம் செய்துள்ளார்.

Advertisment

ஹாலிவுட் பிரபல நடிகர் வில் ஸ்மித், ஆவணப் படம் ஒன்றில் நடிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். மும்பை வந்திருக்கும் அவரை பிரபல பாலிவுட் நடிகர்கள் அனைவரும் பார்ட்டி கொடுத்த வரவேற்றனர்.

இந்தியாவில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் :

மும்பையில் டேரா போடுவதற்கு முன்பு டெல்லியில் உள்ள தாஜ் மஹால் சென்று பல போட்டோக்களும் செல்ஃபிக்களும் எடுத்தார். பின்னர் கங்கை நதிக்கரையில் பக்தியுடன் ஆரத்தி எடுத்தார்.

கடைசியில் மும்பையில் கால் எடுத்து வைத்த அவர், ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து ஆட்டோவை வாங்கி ஓட்டத் தொடங்கிவிட்டார். இந்த ரிஸ்க் அவர் மட்டும் எடுத்தாரா? இல்லை... ஆட்டோ பின்னால் சீட்டில் இருவரை அமர வைத்து அவர்களுக்கு பீதி என்றால் என்ன என்பதை கண்முன்னே நிறுத்திவிட்டார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

#Mumbai #Will Smith #Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment