"பாகுபலி-2", "தங்கல்" படத்தின் வசூலை மிஞ்சும் 'இட்' !

கடந்த 8-ஆம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'இட்' முதல் மூன்று நாட்களில் 787 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது

கடந்த 8-ஆம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'இட்' முதல் மூன்று நாட்களில் 787 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
"பாகுபலி-2", "தங்கல்" படத்தின் வசூலை மிஞ்சும் 'இட்' !

இந்திய சினிமாவில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை 'நூறு கோடி கிளப்' படங்கள் என்று பெருமையாக சொல்வதுண்டு. எப்போதாவது ஒரு படம் நூறு கோடி வசூலைத் தாண்டும். அது பாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி.

Advertisment

ஆனால், இப்போது நூறுக்கு பக்கத்தில் மற்றொரு ஜீரோ சேர்க்கப்பட்டு 'ஆயிரம் கோடி கிளப்' என மாறிவிட்டது அல்லது உருமாற்றப்பட்டுவிட்டது இந்திய சினிமாவின் முகம். இந்திய சினிமாவில் 'பாகுபலி-2' மற்றும் அமீர்கானின் 'தங்கல்' ஆகிய இரண்டு படங்கள் தான் ஆயிரம் கோடியை தாண்டிய படங்களாக உள்ளது. பாகுபலியின் இரண்டு பாகங்களின் மொத்த தயாரிப்பு செலவு 450 கோடி. அதில், பாகுபலி - 2-ஆம் பாகம் 1,700 கோடி வசூலித்தது. அதேபோல், வெறும் 70 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'தங்கல்' 2007 கோடி ரூபாயும் வசூலித்து ஹாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்தது. இதன்பின், இந்திய படங்களின் சந்தைகளை அமெரிக்க சினிமா வல்லுனர்கள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இப்போது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு புதிய படம் இவ்விரு படங்களின் வசூலையும் மிக விரைவில் முறியடிக்க உள்ளது. கடந்த 8-ஆம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'இட்' முதல் மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்துள்ளது. ஒரு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 'இட்' அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 12.30 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளது. மூன்று நாட்களில் படத்தின் வசூல் ரூ. 787 கோடி.

'இட்' படத்தின் மொத்த பட்ஜெட் தொகையே ரூ. 224 கோடி தான். மூன்று நாள் வசூலிலேயே படம் மூன்று மடங்கு அதிகமாக அதன் வரவுசெலவுத் தொகையை வசூலித்துவிட்டது. இதனால் படத்தின் வசூல் 3,000 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
Advertisements

https://www.youtube.com/embed/hAUTdjf9rko

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: