தெலுங்கு சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக முன்னணி நடிகராக திகழ்பவர் பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் மகர சக்கராந்திக்கு (பொங்கல்) திரைக்கு வந்த படம் வீர சிம்ஹா ரெட்டி.
இந்தப் படம் சீரஞ்சிவியின் வால்டர் வீரய்யா படத்துடன் போட்டிப் போட்டு திரையில் சக்கப் போடு போட்டுவருகிறது. இரு படங்களும் ரூ.100 கோடி கிளப்பை தொட்டுவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் வெற்றியை ஹைதராபாத்தில் நடிகர்-நடிகைகள் கொண்டாடியுள்ளனர். அப்போது, நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா), மலையாள நடிகை ஹனி ரோஸுடன் இணைந்து மது அருந்தியது போன்ற புகைப்படம் ஒன்று திங்கள்கிழமை (ஜன.23) வைரலானது.
இருவரும் ஸ்டைலாக ஷாம்பெயின் டோஸ்ட் செய்து பருகுகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தில் பாலையாவின் மனைவி மீனாட்சியாக ஹனி ரோஸ் நடித்திருந்தார்.
ஹைதராபாத்தில் நடந்த வெற்றி சந்திப்பின் புகைப்படங்களில் ஹனி ரோஸ் ஊதா நிற பளபளப்பான கவுன் மற்றும் கவர்ச்சியான மேக்கப்பில் அசத்தலாகத் தெரிந்தார்,
இது சமூக ஊடகங்களிலும் டிரெண்ட் ஆனது. இந்த விழாவில் இயக்குனர் கோபிசந்த் மலினேனி, துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மலையாளத்தில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலமாக 2005ல் அறிமுகமான ஹனி ரோஸ், அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என நடிக்க தொடங்கினார்.
இவர் தமிழில் நடிகர் ஜீவா இரட்டை வேடத்தில் நடித்த சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் இவரது முதல் படம் முதல் கனவே ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/