/indian-express-tamil/media/media_files/2025/10/26/mineral-water-2025-10-26-16-05-09.jpg)
நான் குளிக்க, 12000 லிட்டர் மினரல் வாட்டர் வேணும்: அடம்பிடித்து ஷூட்டிங்கை நிறுத்திய பிரஷாந்த் பட நடிகை!
பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா-பரினிதி சோப்ராவின் உறவினரான நடிகை மீரா சோப்ரா, 2005-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். திரையுலகில் 'நிலா' என்ற பெயரில் அறியப்பட்டார்.
'அன்பே ஆருயிரே' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நிலாவுக்கு தமிழில் லீ, ஜாம்பவான், காளை, மருதமலை, ஜெகன்மோகினி போன்ற பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் 'மருதமலை' தவிர மற்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தமிழில் மார்க்கெட் குறைந்த நிலையில், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்த அவர், ஒரு கட்டத்தில் தென்னிந்தியத் திரையுலகிலிருந்து முற்றிலும் விலகினார். இந்நிலையில், தனது 41 வயதில் கடந்த மார்ச் மாதம் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலைத் திருமணம் செய்துகொண்டார் மீரா சோப்ரா.
தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் நடிகை நிலா செய்த 'அட்ராசிட்டி' குறித்து, அவர் நடித்த 'ஜாம்பவான்' (2006) திரைப்படத்தின் இயக்குநர் நந்தகுமார் தற்போது ஒரு பேட்டியில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். நடிகை நிலா, அந்தப் படத்தின் ஒரு குளியல் காட்சியில் நடிக்க 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்டுக் கடும் சிக்கலை ஏற்படுத்தியதாக இயக்குநர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/26/meera-chopra-mineral-water-2025-10-26-16-07-25.jpg)
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியது: "ஜாம்பவான் படத்தின் ஒரு காட்சி குற்றாலத்தில் படமாக்கப்பட்டது. குற்றாலத்திற்கு அருகில், 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி ஒன்று இருந்தது. நிலாவும் அவரது தோழிகளும் அதில் குளிப்பது போலவும், அப்போது பிரசாந்த் அங்கு வந்ததும் தோழிகள் ஓடிவிட, நிலா அந்தத் தொட்டிக்குள் மூழ்குவது போன்றும் அந்தக் காட்சி படமாக்கப்பட இருந்தது.
ஆனால், நடிகை நிலா அந்தத் தண்ணீரில் குளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். 'நான் இங்கு குளிக்க வேண்டும் என்றால், இந்தத் தொட்டியில் 12,000 லிட்டர் மினரல் வாட்டர் நிரப்ப வேண்டும்' என்று அடம் பிடித்தார்.
இவ்வளவு பெரிய தொட்டிக்கு மினரல் வாட்டர் நிரப்ப முடியாது என்று நாங்கள் மறுக்கவே, அவர் ஷூட்டிங்கிலிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டார். இந்தக் கோரிக்கையால்தான் அன்றைய படப்பிடிப்பில் பெரிய சிக்கல் ஏற்பட்டது," என்று இயக்குநர் நந்தகுமார் அந்தக் காலகட்டத்தில் நிலா ஏற்படுத்திய அட்ராசிட்டி சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us