இளையராஜா 50-முறைக்கு மேல் பார்த்த ஒரே படம்; இந்த படம் அப்படி என்ன கதை தெரியுமா?

இசைஞானி இளையராஜா 50 முறைகளுக்கு மேல் பார்த்த ஒரு படம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இசைஞானி இளையராஜா 50 முறைகளுக்கு மேல் பார்த்த ஒரு படம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
ilai

இசை உலகில் பல சாதனைகளை படைத்த இளையராஜாவின் சாதனைகள் குறித்து சொல்லவே வேண்டாம். சிவக்குமார் தொடங்கி இன்றைய சூரி வரை பல முன்னணி நடிகர்களுக்கு தனது இசையில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இளையரஜா 75 வயதை கடந்த பின்னரும் இன்றைய இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பணியாற்றி வருகிறார். அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.

Advertisment

இசைஞானி இளையராஜா சமீபத்தில் சிம்பொனி இசையமைத்து பெரிய சாதனை படைத்தார். இப்படி இசை உலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இசைஞானி இளையராஜா 50 முறைக்கும் மேல் பார்த்த படம் குறித்து இயக்குநர் ராஜா மனம் திறந்துள்ளார்.நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது, ”1994 - 1995 காலக்கட்டத்தில் எனக்கு கண்மணினு ஒரு நண்பர் இருந்தாங்க. அவங்க இளையராஜாவோட அக்கா பையன். அவர் என்னிடம் சொன்னார் என் மாமா இளையராஜா ‘அமாடியஸ்’ திரைப்படத்தை ஒரு 50 தடவை பார்த்திருப்பார் என்று சொன்னார். எனக்கு ராஜா சார் 50 தடவை இந்த படத்தை பார்த்திருக்கிறாரா. அந்த அளவிற்கு அவருக்கு நேரம் இருந்ததா என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.”

கடந்த 1984-ஆம் ஆண்டு வெளியாகி இன்றளவும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹாலிவுட் திரைப்படமான 'அமாதியஸ்' (Amadeus) உலக சினிமாவின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. செக் நாட்டு இயக்குநரான மிலோஸ் ஃபார்மன் இயக்கிய இத்திரைப்படம், இசை மேதை வுல்ஃப்கேங் அமாதியஸ் மொஸார்ட்டின் (Wolfgang Amadeus Mozart) வாழ்க்கை மற்றும் மரணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டாம் ஹல்ஸ்,  எஃப். முர்ரே ஆபிரகாம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ஆபிரகாம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். 

amadeus

வியன்னாவின் அரசவைக் கலைஞராக இருக்கும் சலேரி, தன்னையே கடவுளின் கருணை பெற்றவராக நம்புகிறார். ஆனால், மொஸார்ட்டின் தெய்வீகமான இசைத்திறமையைக் கண்டபின், அவர் பொறாமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார். ஒழுக்கமற்ற, கலகலப்பான இளைஞனான மொஸார்ட்டுக்கு இத்தகைய இசை ஞானத்தைக் கொடுத்த கடவுள் மீது அவர் கோபம் கொள்கிறார். அந்தப் பொறாமையால் மொஸார்ட்டின் வாழ்க்கை மற்றும் கலைப் பயணத்தில் சலேரி ஏற்படுத்தும் மறைமுகத் தடைகள் தான் இப்படத்தின் கதைக்களம். 'அமாதியஸ்' திரைப்படம் 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உட்பட 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்தது. இப்படம் நெட்பிளிக்ஸில் காண கிடைக்கிறது

Advertisment
Advertisements
Cinema Ilaiyaraaja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: