தனுஷுக்காக ‘மாரி 2’ படத்தில் பாடிய இளையராஜா

தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘மாரி 2’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் இளையராஜா.

தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘மாரி 2’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் இளையராஜா.

தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘மாரி’. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ உருவாகி வருகிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

‘மாரி 2’ படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்துக்காக, யுவன் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் இளையராஜா. இந்த விஷயத்தை ட்விட்டரில் புகைப்படத்தோடு ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

“இசைஞானி இளையராஜா சார் எனக்காக ‘மாரி 2’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. என்னவொரு தெய்வீக அனுபவம்… நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்” என தனுஷ் தெரிவித்துள்ளார்.

×Close
×Close