விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா

விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்க இருக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.

illayaraja

விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்க இருக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.

துணை நடிகனாக இருந்த விஜய் சேதுபதியை, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. சினிமாவில் இன்றைக்கு விஜய் சேதுபதியின் இடம் என்பது, மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறது.

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கினார் சீனு ராமசாமி. ஆனால், அந்தப் படம் இன்னும் ரிலீஸாக முடியாமல் தவித்து வருகிறது. எனவே, அடுத்ததாக ‘தர்மதுரை’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் தன்னுடைய நாயகனுக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தையும் வழங்கி மகிழ்ந்தார் சீனு ராமசாமி.

‘தர்மதுரை’ படத்தைத் தொடர்ந்து ‘மாமனிதன்’ என்ற படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்குவதாக அறிவித்தார் சீனு ராமசாமி. இந்தப் படத்தை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்ட படங்களை முடிக்கவேண்டி இருப்பதால், ‘மாமனிதன்’ தொடங்க தாமதமாகிறது. எனவே, உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்குகிறார் சீனு ராமசாமி. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கப் போவதாக அறிவித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து ‘மாமனிதன்’ படத்திற்கு இசையமைக்கப் போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இப்படி மூன்று பேரும் சேர்ந்து இசையமைப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Illayaraja will score for vijay sethupathis maamanidhan

Next Story
பாகமதி – சினிமா விமர்சனம்bhaagamathie anushka
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express